இலங்கை

செம்மணியில் தொடரும் அதிர்ச்சி; இரட்டைக் குழந்தைகளும் கொடூரமாகப் படுகொலை ;ஒன்றாக எலும்புக் கூடுகள் மீட்பு

பார்ப்பவர்களின் மனதை உலுக்கும் வகையில் இரட்டை குழந்தைகளின் மனித என்பு கூட்டு தொகுதிகள் செம்மணி மனித புதைகுழியில் நேற்று வியாழக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 51ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று நடைபெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.

540 மற்றும் 540 ஏ என இலக்கமிடப்பட்ட இரட்டை குழந்தைகளின் மனித என்பு கூட்டு தொகுதிகளே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவற்றை அகழ்வு செய்யும் பணி எதிர்வரும் தினங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை செம்மணி மனித புதைகுழியில் இதற்கு முன்னரும் இதையொத்த இரட்டை குழந்தைகளின் மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button