இலக்கியச்சோலை

பிராண சக்தியும் மனித வளமும்! …. சு.ஸ்ரீநந்தகுமார்.

 பிராண சக்தி அல்லது பிராணா எனும் உயிர் அல்லது வாழ்க்கை விசை (சக்தி) பிரபஞ்சத்திலுள்ள யாவற்றையும் இயங்கச் செய்கின்ற ஓர் இயற்கை சக்தியாகும். எல்லா இயற்கை வைத்தியங்களும், சிகிச்சைகளும் இந்த உயிர்ச்சக்தியை எவ்வாறு சமநிலையில் வைத்திருக்கும் புரிந்துணர்வைக் கொண்டே செயற்படுகின்றன. பிராண சிகிச்சை அல்லது ‘ரெக்கி’ (Reiki) என்று ஜப்பானிய மொழியில் அழைக்கப்படும் சிகிச்சை முறையானது மிகவும் பழமையானது. இந்த சிகிச்சைமுறை ‘கைவலிமை’ என்று திபேத்தியரினால் சமண சமயத்தில் கூறப்பட்டு பல நூற்றாண்டு காலமாக வழக்கில் உள்ளது.

ரெக்கி (Reiki) ஒரு ஜப்பானிய சொல்லாகும். இது சுயல-Ray-Key அதாவது REI – பிரபஞ்சமானது, KI –வலிமையான உயிர் சக்தி (life force) அதாவது, பிரபஞ்சமான, வலிமையான உயிர்ச்சக்தி எனப்படுகிறது. இந்த உயிர்ச்சக்தியானது முதலில் இதனைச் செய்பவரின் (healer) உள்ளே நுழைந்து, அதன்பின் கை வழியாக இதனைப் பெறுபவரினுள்ளே செல்கின்றது. இப்பிராணா உடல், மனம் (mind), உயிர் அல்லது ஆவி (ளிசைவை) என்பவற்றைச் சமநிலைப்படுத்துகின்றது.

பிரபஞ்ச உயிர்ச்சக்தி (பிராணா) எதனைச் செய்ய முடியும்?

இச்சிகிச்சை முறையால், புற்று நோயைக் குணப்படுத்தமுடியும், இரத்த அடைப்புக்களை நீக்கமுடியும், நெஞ்சு எரிவுகளையும், வயிற்று வலிகளையும், கால் மூட்டு வியாதிகளையும், மன அழுத்தங்களையும் அறவே இல்லாமல் செய்யமுடியும்.
இச்சக்தி சிகிச்சையை சிரத்தையுடன் பயின்று, அதில் வல்லுனராக முடியும்(Master of Prana or Reiki healer).. இப்பயிற்சியை ஒரு தவமென்று கூறலாம். இது பற்றிய விசேட பயிற்சியையும், அங்கீகாரத்தையும்,

இப்பயிற்சி முறைகளில் அனுபவமும் அங்கீகாரமும் பெற்ற ஒரு குருவின் மூலம் நிறைவாகப் பெறமுடியும். குருவென்பவர் நம்மில் பலர் நினைப்பதுபோல் எம்மனதிலும் உடலிலும் ஒரு கிளர்ச்சியை, மனமகிழ்ச்சியை, அவர் ஆற்றும் அதிசயங்களாலும், பேச்சு வன்மையினாலும்ää ஆன்மீக ஒளிர்வாலும் உருவாக்குபவர் அல்ல, எம்மிடையேயுள்ள சில அவசியமற்ற சுய திணிப்புக்களையும், மூட நம்பிக்கைகளையும் தகர்த்தெறிந்து, புரியாத சில எல்லைகளுக்குள் கட்டுப்படாது, எதிர்ப்புகளை சமாளித்து, துணிவாக நாம் சில நல்ல காரியங்களை, சேவைகளைச் செய்யும் மன உணர்வுகளை வெளிக்கொண்டுவர உதவுவபரே குருவாகும், உணர்ச்சி வசமூட்டுவதும், கிளர்ச்சியை மனதில் தருவதும் குருவின் வேலையல்ல. மதத்தலைவர் வேறு குரு வேறு. குறித்த இலக்கை அடைய வேண்டிய வழிகளை நாம் முன்னெடுத்துச் செல்லத் தேவையான உடல், உள வலிமையை நாம் உருவாக்கிக் கொள்ள வழி அமைத்துத் தருவதே நல்ல குருவின் இலக்கணம்.

எவருடைய அருகாமையில் இருக்கையில் அசௌகரியம் இருந்தாலும் அதனை மீற முடியாமல் நாம் இருப்போமோ, அவரே எம்மை நல்வழிப்படுத்தும் குருவாகும். அத்தகைய குருவின் மூலம் இந்த அரிய பிராண சக்தி சிகிச்சை முறை அதனை பயிலுபவரிடம் பரவுமானால் அதன் வலிமை நோய்களையும், மன உளைச்சல்களையும், உடல் வேதனைகளையும் தகர்க்கும் மருந்தாக அமையும். இவ்வாறு வழிவந்த பிராணா அல்லது ‘ரெக்கி’ பல பிரயோகங்களைக் கொண்டது. இதனால் நீரில் சக்தியூட்டலாம்,மருந்துகளை மேலும் வலிமையுள்ளதாக்கலாம்  தாவரங்களை காக்கலாம். பொருட்களில், மனிதர்களில், ஏனைய உயிரினங்களில் உள்ள தீயசக்திகளை அகற்றலாம். நேரில் இல்லாமல் தூரத்தில் உள்ளவர்களின் நோய்களை,  உபாதைகளை, மன உளைச்சல்களை ரெக்கி அலைகள் (சயலள) மூலமாக குணப்படுத்தலாம். இந்த அரிய சக்தியானது,முதன்மையான இறை சக்தியின் வரப்பிரசாதமாகும்;. இது எம்மை மட்டுமல்ல எம்மைச் சு10ழ்ந்தவர் வாழ்க்கையையும் செழுமைப்படுத்தும்.

ரெக்கி அல்லது பிராணா குருவிடமிருந்து சீடர்களுக்கு(students) உபதேச(oral) அங்கீகாரமாகவே பரிமாறப்படுகின்றது (attunement). நாம் ஒவ்வொருவரும், இரட்டை மூலக்கூறுகளின் (RNA/DNA) சேர்க்கையினால் உருவாகிறோம். இவ் ஒவ்வொரு மூலகமும், ஏறு,  இறங்கு முகமான அண்ட சராசர (பிரபஞ்ச) உயிர் விசையின் தோற்றமாகும். நாம் இப்பிரபஞ்ச உயிர் விசையை எமக்கு உதவுமாறு வேண்டி,  நாம் அச்சக்தியின் ஓட்டத்திற்கு ஒரு கருவி அல்லது ஊடகமாகி, இந்த அரிய பிராணாவை மற்றைய உயிர்களுக்கோää ஊடகங்களுக்கோ வழங்கி அவற்றைச் சீர்ப்படுத்தலாம்.

இந்த பிராணா சிகிச்சையை ஆரம்பிக்கு முன்னர், எம்மை நடுநிலைப் படுத்தி, எம்மில் சக்தியை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு மிகவும் வலிமையான ஒலிகளை நாம் எம் உதவிக்கு உச்சரிக்க வேண்டியுள்ளது. பொதுவாக ஓம் (OM), குணகு(Hunah Ku) பயன்படுத்தலாம்.

OM – ஓம் என்பது அண்டமயமான தோற்றம் அல்லது படைப்பின் ஒளியாகும் (universal sound of creation). ஓம் என்பது எல்லா மந்திரங்களின் மூலமாகும், அல்லது தாயாகும். ஓம் என்பது அல்பா (Alpha) – ஒமேகா ((Omega), அதாவது தோற்றமும் அதுவே! முடிவும் அதுவே!

உலக சமூகத்தில் முதன்மையான இறைவன் அல்லது படைப்பாளிக்கு (creator) பல பெயர்கள் உண்டு. அவற்றில் சில, கடவுள், அல்லா, புத்தா என்பவையாகும். எல்லா பெயர்களும் ‘ஆ’ என்னும் ஒரேயொரு ஒலியை பொதுவாகக் கொண்டுள்ளன.

பிராணா எம் அகத்தில் இருந்து உருவானது, எவ்வாறு ஒரு மனிதனின் நிழலும் அவன் கூட சேர்ந்து இருக்கிறதோ, அது போல இந்த பிராணாவும் (பிராண சக்தி) எம்மிடமே – எம் அகத்தில் கலந்துள்ளது. எண்ணத்தின் பிரதிபலிப்பாக இது எம்முடலில் புகுந்துள்ளது; பிரஸ்னா உபநிடதம் இவ்வுண்மையை கூறுகின்றது.

இப்பிராண சக்தியைக் கொண்டு சிகிச்சை அளிக்கையில் முதல் தடவை, சிகிச்சையின் பலன் எதிர்பார்த்த அளவுக்கு திருப்திகரமாக இல்லாத சந்தர்ப்பங்களும் உண்டு. சில வேளைகளில் முதல் சிகிச்சையின் போது நோ அல்லது நோய் அதிகமாகத் தோற்றும். இது அங்கு,நோய் ஏற்கனவே உள்ளதென்பதும், இந்த நோ அதில் பிராணாவினால் ஏற்படும் மாற்றம் காரணமாகவே ஏற்படும், புதிய விளைவு என்றும் தான் கொள்ளல் வேண்டும்; ஆகவே, இது நல்ல அறிகுறியாகும். இரண்டாவது தடவை பிராண சிகிச்சையின் போதும், சில நோய்கள் தீரும் பலன் திருப்திகரமாக இராது போகலாம்.

மூன்றாவது அல்லது அதன் பின்னுள்ள சிகிச்சைகளின் போது திடீரென மறைந்து விடச் சாத்தியம் உண்டு. இவ்வகைய சந்தர்ப்பங்கள்,அதன் பின் சாதாரண வைத்திய பரிசோதனைகளின் போது நிரூபிக்கப்படுகின்றன(medical scanning or checkup). இதன் பலனாக உங்கள் வாழ்க்கையே மாறியதாக உணர்வீர்கள்.
பிராணாவுடன் வேலை செய்வது ஓர் உண்மையான அன்பு மயமே! இந்த தூய சக்தியில் ஒரு மாயம் எதுவெனில் அது மிகவும் அழகானது, அதிசயமானது. இதன் சக்தியைää அதன் பலனை விவரிக்க முடியாது. இதனை ஒரு குருவிடமிருந்து அறிந்து கொள்கையில், வாய் பேச முடியாத, கண்ணில் நீர் ததும்பும் நிலையை எவரும் அடையலாம், அவ்வளவு அழகானது – இந்த பிராணா என்னும் பயிற்சி.

எமக்கு வரும் முதுகு (பின்புற விலா) வலிகள், இடுப்பு நோவுகள், மூட்டு வலிகள் என்பன பலவருடங்களாக எமது உடல் கூறுகள் வளர்த்துக் கொண்ட பழக்கவழக்கங்களும், எமது எண்ணங்களினதும் பிரதிபலிப்புகளே ஆகும். பொதுவாக எமது வாழ்க்கைமுறை அல்லது பழக்கவழக்கங்களில் சில நல்லவை, சில கூடாதவை. எம்மிடையே அடிக்கடி வரும் பதட்டங்கள் இத்தகைய உடல் சம்பந்தமான உபாதைகளாலும்ää பிரச்சனைகளாலுமே உருவாகின்றன . இத்தகைய பதட்டங்களை தக்க வைத்துக் கொள்ளும் எமது பழக்கமே தீய விளைவுகளைää உடல் மனரீதியாக உருவாக்குகின்றன.

பிராணாவை கூடுலதாக எமது உடலில் கட்டுப்படுத்தி வைக்கையில் அதுவும் தீய விளைவுகளை உண்டாக்குகின்றது. பிராண சிகிச்சையின் மூலமாக இந்த உடல் அங்கங்களில் அதிகமான பிராணாவினால் உண்டாகும் அடைப்புகளை நீக்கலாம். இதனை சுத்தப்படுத்தல் அல்லது தூய்மைப்படுத்தல் ((cleansing) என்று சொல்வார்கள். அதிக பிராணாவை எமது உடற்கூறுகளில் இருந்து அகற்றி, பிராணா குறைந்த இடங்களுக்குத் தேவையான பிராணாவை வழங்கி எமக்கு நாமே முறையான பயிற்சிக்குப் பின்னர் சுய சிகிச்சை அளித்துக் கொள்ளலாம்.

இந்த பிராண வைத்தியம் அல்லது சிகிச்சை நோய்களை நீக்கும் அல்லது நிவாரணம் அளிக்கும் ஓர் அதிசயமா? இல்லை| இது ஓர் எளிய யோகமுறை பல ஆயிரம் வருடங்களின் முன்னமே அறியப்பட்டு வழி வழியாக வழக்கத்தில் வந்தது. இது உடலின் உயிர்சக்தியை, பிராணாவினால் வலிவுறச் செய்து எல்லா உடல் அமைப்புகளையும், உறுப்புகளையும், சீரிய சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றது.

அன்புடன் சு.ஸ்ரீநந்தகுமார்
(Master of Computing (MComp)
Monosh University Australia
Master of Reiki,
Australian Reiki Connection (ARC), Australia.

Loading

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.