பாம்பை விட கொடிய விஷமுள்ள மரம்: கனியை உண்டால் மரணம் கூட ஏற்படலாம்
உலகிலேயே பாம்புகள் மட்டும்தான் அதிக விஷம் கொண்டவை என்று நாம் நினைத்திருப்போம்.
ஆனால், பாம்புகளை விடவும் அதிக விஷத்தன்மை கொண்ட தாவரங்களும் உள்ளன.
அப்படிப்பட்ட ஒரு மரம் தான் மஞ்சினீல் மரம் (Manchineel Tree).
தென் அமெரிக்கக் கண்டத்தின் வடக்கே கரீபியன் தீவுகள் மற்றும் புளோரிடாவில் இம் மரங்கள் காணப்படுகின்றன.
இம் மஞ்சினீல் மரத்தில் அப்பிள் போன்ற பழங்கள் காணப்படும். ஆனால், இவற்றை உண்ணக் கூடாது.
காரணம் என்னவென்றால், மரத்தில் இருந்து சுரக்கும் திரவம் பழத்துடன் சேரும். இது மனித உடலில் கடுமையான விஷத்தை உண்டாக்கும்.
கரீபியன் தீவுகளில் உள்ள சில மஞ்சினீல் மரங்களில் எச்சரிக்கை பலகைகளும் போடப்பட்டுள்ளன.
மேலும் மழைக் காலங்களில் இம் மரத்துக்கு கீழ் நிற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இம் மரத்தின் திரவம் மனிதர்கள் மீது பட்டால் தொண்டை, வாயில் அசௌகரியம், தோல் எரிச்சல்கள், ஒவ்வாமை போன்றன ஏற்படும்.
இது வயிற்றுக்குள் செல்லும்பட்சத்தில் மரணம் கூட ஏற்படலாம் என கூறப்படுகிறது.