பிரித்தானியாவில் இன்று பொதுத் தேர்தல்; ஆளும் கட்சி கடும் சரிவை சந்திக்கும் வாய்ப்பு
பிரித்தானியாவில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
வாக்குச் சாவடிகள் இன்று காலை 07 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். நேரில் சென்று, தபால் மூலம் அல்லது ப்ரொக்ஸி மூலம் வாக்களிக்கலாம்.
வாக்காளர்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதுடன் பிரித்தானிய, ஐரிஷ் அல்லது பொதுநலவாய நாடுகளின் குடிமகனாக இருக்க வேண்டும். இதன்படி, சுமார் 50 மில்லியன் மக்கள் வாக்களிக்கப் பதிவு செய்துள்ளனர்.
வாக்குப்பதிவுகள் நிறைவடைந்ததன் பின்னர் கருத்துக் கணிப்புகள் ஒளிபரப்படும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வாக்குப்பதிவுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெறுவதுடன் பெரும்பாலான முடிவுகள் ஒரே இரவில் அறிவிக்கப்படும் என்பதுடன் இறுதி முடிவுகள் நாளை மறுதினம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,650 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரு கட்சி 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு பெரும்பான்மையை பெரும் கட்சி கட்சியின் தலைவர் பிரதமராக பொறுப்பேற்பார்.
எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் நாடாளுமன்றம் இடம்பெற்று தற்போதைய பிரதமர் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதோடு, கூட்டணி அமைத்து அல்லது சிறுபான்மையினருடன் இணைந்து ஆட்சியமைப்பதன் மூலம் ஆட்சியமைக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.
வாக்கெடுப்பில் மத்திய-இடது தொழிற்கட்சி மாபெரும் வெற்றியைப் பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தொழிற்கட்சியின் இந்த வெற்றியானது 14 ஆண்டுகால கன்சர்வேடிவ் அரசாங்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும்.
கட்சியின் வரலாற்றில் மிக மோசமான முடிவு பற்றிய கணிப்புகளை எதிர்கொண்ட கன்சர்வேடிவ்கள், தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு ஒரு பயனுள்ள எதிர்ப்பை வழங்குவதற்கு போதுமான இடங்களைப் பெற வேண்டும் என கூறியது.
“தொழிற் கட்சி மிகப்பெரிய பெரும்பான்மையைக் காணக்கூடும், இது இந்த நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய பெரும்பான்மை” என கன்சர்வேடிவ் கட்சியின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
1997 ஆம் ஆண்டு கட்சியின் முன்னாள் தலைவர் டோனி பிளேயர் மகத்தான வெற்றி பெற்ற 418 இடங்களை விடவும், வரலாற்றில் மிக அதிகமானதாகும்.