வாரிசு அரசியல்: மஹிந்த குடும்பத்தை எதிர்த்த மைத்திரி மகனை களமிறக்குகிறார்
வாரிசு அரசியல்: மஹிந்த குடும்பத்தை எதிர்த்த மைத்திரி மகனை களமிறக்குகிறார்
எதிர்வரும் பொதுத் தேர்தலிலோ அல்லது ஜனாதிபதித் தேர்தலிலோ போட்டியிட எதிர்பார்க்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மாறாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் தனது மகன் தம்மசிறிசேன போட்டியிடவுள்ளதாகவும் அதற்கு தனது ஆசிகளையும் ஆலோசனைகளையும் வழங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், தான் தீவிர அரசியலில் இருந்து விடைபெறவில்லை என்றும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னேற்றத்திற்காக தன்னால் இயன்றதை தொடர்ந்து செய்து வருவதாகவும் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
2015ஆம் ஆண்டு பொது வேட்பாளராக களமிறங்கியிருந்த மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சியை கடுமையாக எதிர்த்தார்.
ஆனால், 2018ஆம் ஆண்டு மீண்டும் மஹிந்த ராஜபக்சவை பிரமராக நியமித்து இலங்கை மக்களுக்கு அதிர்ச்சியையும் அவர் அளித்திருந்தார்.
இந்த நிலையில் குடும்ப ஆட்சிக்கு எதிரான கருத்துகளை வெளியிட்ட மைத்திரிபால சிறிசேன, அவரது மகனை பொதுத் தேர்தலில் களமிறக்க உள்ளதாக தெரிவித்துள்ள கருத்து பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.