யூஜெனிக்ஸ் சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பு: ஜப்பானியர்களுக்கு வெற்றி
1948 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஆயிரக்கணக்கான மக்கள் வலுக்கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்ட ஒரு செயலிழந்த யூஜெனிக்ஸ் சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என ஜப்பானின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நட்டஈடு கோரிக்கைகள் மீதான 20 ஆண்டு கால வரம்புகளை பயன்படுத்த முடியாது எனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பல தசாப்தங்களாக துன்பங்களை அனுபவித்த பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த தீர்ப்பு பெரிய வெற்றியென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தரமற்ற சந்ததியினரின் தலைமுறையைத் தடுப்பதற்கு பரம்பரை அறிவுசார் குறைபாடுகள் உள்ளவர்களை மருத்துவர்கள் கருத்தடை செய்ய வேண்டும் என்பது அந்த சட்டமாகும்.
1948 மற்றும் 1996 க்கு இடையில் நடைமுறையில் இருந்த யூஜெனிக்ஸ் சட்டத்தின் கீழ் சுமார் 16,500 பேர் வலுக்கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்டதை ஜப்பான் அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது.
மேலும் 8,500 பேர் அவர்களின் சம்மதத்துடன் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
யூஜெனிக்ஸ் சட்டம் ஜப்பானின் அரசியலமைப்பை மீறுவதாக சமீபத்திய ஆண்டுகளில் பிராந்திய நீதிமன்றங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.