பிரித்தானிய பொது தேர்தல்: 24 மணி நேரத்திற்கு முன்னதாக வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்
பிரித்தானியா பொது தேர்தலுக்கு இன்னும் 24 மணி நேரங்களே இருக்கும் நிலையில், பிராதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
சர்வேஷன் என்ற கருத்துக்கணிப்பு நிறுவனம் முன்னெடுத்த கருத்துக்கணிப்பின் முடிவுகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிரித்தானியா பாராளுமன்றில் 650 இடங்களில் 484 இடங்களில் தொழிற்கட்சி வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த வெற்றியானது தொழிற்கட்சியின் முன்னாள் தலைவர் டோனி பிளேயர் 1997ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற 418 இடங்களை விடவும் அதிகமாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கன்சர்வேடிவ் கட்சி 64 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டது, இது 1834ஆம் ஆண்டு கட்சி நிறுவப்பட்டதிலிருந்து மிகக் குறைவான இடங்களாகும்.
வலதுசாரி சீர்திருத்த பிரித்தானிய கட்சி ஏழு இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டது.
சர்வேஷன் கருத்துக்கணிப்பானது மல்டிலெவல் ரிக்ரஷன் மற்றும் பிந்தைய அடுக்கு (எம்ஆர்பி) நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏனைய கருத்துக்கணிப்புகளும் தொழிற்கட்சியின் வெற்றியை சுட்டிக்காட்டியுள்ளன. அந்த முடிவுகளும் வேறுபட்ட முடிவை காட்டவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.