“தொழிற்கட்சி அரசாங்கம் பேரழிவு” – ரிஷி: பிரித்தானிய தேர்தலுக்கு இன்னும் இருப்பது இரண்டு நாட்கள்
பிரித்தானியாவில் நாளை மறுதினம் வியாழக்கிழமை பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் “கன்சர்வேடிவ்களால் மாத்திரமே தொழிற்கட்சி தலைமையிலான அரசாங்கத்தை எதிர்கொள்ள முடியும்” என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த கூற்று அவர் தோல்வியை ஒப்புக்கொண்டது போல் தெரிகிறது.
“தொழிலாளர் அரசாங்கம் நாட்டிற்கு மிகவும் மோசமானதாக இருக்கும் என்றும் சரிபார்க்கப்படாத தொழிற்கட்சி அரசாங்கம் ஒரு பேரழிவாக இருக்கும்” என தெரிவித்த சுனக் அதிலிருந்து மீள்வதற்கு பல தசாப்தங்கள் ஆகும்” என்றும் கூறியுள்ளார்.
அத்துடன் நைஜல் ஃபரேஜ் பிரித்தானியாவை பிளவுபடுத்தும் அரசியல்வாதிகளில் ஒருவர் என விமர்சித்த ரிஷி சுனக் அவர்
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக பல தசாப்தங்களாக குற்றம் சுமத்தியவர் என்றும் தெரிவித்தார்.
மேலும் சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவில் டொனால்ட் டிரம்பிற்காக அவர் பிரச்சாரம் செய்தார் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரித்தானியாவில் மிகவும் திறமையான சொற்பொழிவாளர் மற்றும் ஆர்வலர்களில் ஒருவரான நைஜல் ஃபரேஜ், அடுத்த மாதம் 04ஆம் திகதி பிரித்தானிய பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அண்மையில் அறிவித்தார்.
அவரது இந்த அறிவிப்பு அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக்கின் பழமைவாதி தரப்புக்கு பெரும் குழப்பத்தை ஏற்பத்தியது.
நைஜல் ஃபரேஜ் இதற்கு முன்னர் ஏழு முறை போட்டியிட்ட போதிலும் ஒருமுறைகூட நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
ஆனால் இந்த தேர்தலில் மிகப் பாரிய மாற்றம் ஏற்படும் என பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.