புடினுக்கு வேட்டை வேட்டை நாய்களை பரிசளித்த வடகொரிய ஜனாதிபதி: என்ன காரணம் தெரியுமா?
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், வடகொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது வடகொரிய ஜனாதிபதி இரண்டு நாய்களை பரிசாக வழங்கியுள்ளார்.
கடந்த 24 ஆண்டுகளின் பின்னர் புடின் வடகொரியாவிற்கு முதன்முறையாக விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார்.
இந்த ஒப்பந்தத்தில், இரு நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு தாக்குதலுக்கு இலக்கானால் மற்றொரு நாடு கைகொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச அழுத்தங்களை புறக்கணித்து புடின் வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் வட கொரிய தலைநகர் பியாங்யோங்கில் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் புடின் வடகொரிய ஜனாதிபதிக்கு ரஷ்யாவின் விலை உயர்ந்த சொகுசு காரான ஆரஸ் உள்ளிட்ட பரிஷசுகளை வழங்கியதாக ரஷ்ய அதிபரின் உதவியாளர் யூரி உஷாகோவை மேற்கோள்காட்டி சர்தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்நிலையில் கிம் ஜோங் உன் இரண்டு தேசிய புங்சன் நாய்களை பரிசாக வழங்கிய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம்பகிரப்பட்டு வருகின்றது.
புங்சன் (Pungsans) என்பது வட கொரியாவில் வேட்டை நாய்களின் இனமாகும். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நாய்கள் மீது விருப்பம் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.