உலகம்

வியட்நாமில் ரஷ்ய ஜனாதிபதி; போரை ஊக்குவிப்பதற்கான தளம் என அமெரிக்கா விமர்சனம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கிழக்கு ஆசிய சுற்றுப்பயணத்தின் இரண்டாவது விஜயமாக வியட்நாம் தலைநகர் ஹனோயை சென்றடைந்தார்.

வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டதையடுத்து இந்தப் பயணம் இ்டம்பெற்றுள்ளது.

இந்தப் பிராந்தியத்தில் ரஷ்யா அனுபவிக்கும் இராஜதந்திர ஆதரவின் நிருபணமாக விளங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரெய்னில் தனது ஆக்கிரமிப்புப் போரை ஊக்குவிப்பதற்காக ஜனாதிபதி புடினுக்கு இந்த விஜயம் ஒரு தளத்தை வழங்கியதாக புடினின் விஜயம் குறித்து அமெரிக்கா விமர்சித்துள்ளது.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடனான தனது உறவை மேம்படுத்தும் முயற்சியுடன் ரஷ்யாவுடன் வைத்திருக்கும் வரலாற்று உறவுகளை வியட்நாம் தற்போது வரை பேணுகின்றது.

1950 ஆம் ஆண்டுகளில் வடக்கு வியட்நாமில் புதிய கம்யூனிஸ்ட் அரசுக்கு சோவியத் யூனியன் வழங்கிய முக்கிய இராணுவ, பொருளாதார மற்றும் இராஜதந்திர ஆதரவுக்கு, ரஷ்யாவுடனான வியட்நாமின் உறவுகள் நெருக்கமானவை மற்றும் பல தசாப்தங்களுக்கு பின்னோக்கி செல்கின்றன.

இந்நிலையில் புடினின் இந்த விஜயத்தின் போது வர்த்தகம், கல்வி மற்றும் எரிசக்தி பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுத ஏற்றுமதி, உக்ரெய்ன் உடனான போர் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் பிரிக்ஸ் குழுவில் இணைவதற்கு ஹனோய்க்கு மாஸ்கோவின் வாக்குறுதியளிக்கப்பட்ட ஆதரவு குறித்தும் கலந்துரையாடப்படும் என ஆய்வாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரெய்னுக்கு எதிரான படையெடுப்பு மீதான சர்வதேச தடைகளுக்கு மத்தியில் ரஷ்யாவிலிருந்து வியட்நாமின் ஆயுத இறக்குமதி அண்மைய காலமாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.