ஈரானின் காவற்படையை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்ட கனடா: குடிமக்களை வெளியேறுமாறும் அறிவிப்பு
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படையை பயங்கரவாத அமைப்பாக கனடா பட்டியலிட்டது
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படையை (IRGC) பயங்கரவாத அமைப்பாக கனடா பட்டியலிட்டுள்ளது.
கனேடிய அரசாங்கம் நேற்று புதன்கிழமை(20) இந்த அறிவிப்பை வெளியிட்டது,
ஈரானில் உள்ள கனேடிய குடிமக்களை வெளியேறுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஒட்டாவாவிற்கு பயங்கரவாத நிதியுதவியை எதிர்ப்பதற்கு உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படையின் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு கனடா தனது வசம் உள்ள அனைத்து கருவிகளையும் பயன்படுத்தும் என கனேடிய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனடாவின் அறிக்கை “ஞானமற்ற மற்றும் வழக்கத்திற்கு மாறான அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை” என ஈரான் இன்று வியாழக்கிழமை கண்டித்துள்ளதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கனடாவின் இந்த நடவடிக்கை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படையின்
சட்டபூர்வமான மற்றும் தடுப்பு சக்தியில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது” என ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
அறிவிப்பிற்கு பதிலளிக்க தெஹ்ரானுக்கு உரிமை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.