ஹமாஸை ஒழிப்பது மக்களின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கு சமம்
ஹமாஸ் – இஸ்ரேலுக்கு இடையிலான போர், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகி இதுவரை தொடர்கிறது.
ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நடவடிக்கையின் பின்புலத்தில் பல உயிர் பலிகள் ஏற்பட்டாலும் கூட இன்னமும் இஸ்ரேலின் குறிக்கோள் முழுமையடையவில்லை.
இந்நிலையில் ஹமாஸ் உடனான போர் தொடர்பில், இஸ்ரேலின் மூத்த செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறுகையில், “ஹமாஸ் அமைப்பை ஒழிப்பது என்பது, மக்களின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கு சமம். கடைசியில் சரியான மாற்று வழி கிடைக்காத பட்சத்தில் ஹமாஸ் மீண்டும் பிரச்சினையாக உருவாகலாம். ஹமாஸ் ஒரு சித்தாந்தம். அதை அழிக்கவே முடியாது” என்று கூறியுள்ளார்.
இந்த கருத்தானது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிக்கும் வரையில் எங்களது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது. ஹமாஸ் இராணுவம் மற்றும் நிர்வாக அமைப்பு கொண்ட கட்டமைப்பை முற்றாக அழிப்பதுதான் இந்த போரின் முக்கிய குறிக்கோள். இஸ்ரேலிய பாதுகாப்பு படை இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.