மஹிந்தவின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வருகிறது; அதிர்ச்சியில் தொண்டர்கள்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி விரும்பவில்லை என நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உடல்நலக்குறைவு மற்றும் மருத்துவ பரிந்துரைகள் காரணமாக முழுநேர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் உள்ள அசௌகரியத்தை கருத்தில் கொண்டு மஹிந்த ராஜபக்ஷ இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
எவ்வாறாயினும், எதிர்வரும் தேர்தலில் தமது கட்சியின் வெற்றிக்காக அவர் பாடுபட கட்சிக்கு உறுதியளித்துள்ளார்.
இலங்கை அரசியலில் கடந்த இரண்டு தசாப்தகாலமாக தீர்மானமிக்க நபராகவும் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் என பல்வேறு பதவிகளை அலங்கரித்தவராகவும் உள்ள மஹிந்த ராஜபக்சவின முடிவு குறித்து தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பொதுஜன பெரமுன என்ற கட்சி உருவாக்கப்பட்டு குறுகிய காலத்துக்குள் மக்களின் ஆதரவை பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர மஹிந்தவே காரணம். அவர் அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வுபெற்றால் அது அக்கட்சிக்கு பாரிய இழப்பாக இருக்கும் என தொண்டர்கள் புலம்பி வருவதாகவும் தெரியவருகிறது.