மோடி- போப் பிரான்சிஸ் இடையே சந்திப்பு: இந்திய பயணத்துக்கும் அழைப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி G7 மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் போப் பிரான்சிஸ்ஸை சந்தித்துள்ளார்.
G7 மாநாட்டிற்கான பயணத்தின் போது போப் பிரான்சிஸ் அவர்களை சந்தித்தேன். மக்களுக்கு சேவை புரிய மற்றும் எங்கள் உலகை மேலும் தூய்மையான இடமாக மாற்ற அவரது அர்ப்பணிப்புகளை நான் பாராட்டுகிறேன். இந்தியாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளளேன்‘ என நரேந்திர மோடி தனது X தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மோடி மற்றும் போப் பிரான்சிஸ் இடையே 2021ஆம் ஆண்டில் வத்திக்கானில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
முன்னாள் இந்திய பிரதமர் பிஹாரி வஜ்பாயின் பின்னர் இந்திய பிரதமர் மற்றும் போப் பிரான்சிஸ் இடையிலான முதல் சந்திப்பு அதுவாகும்.
G7 மாநாட்டின் போது தமது உரையில், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழிநுட்ப வளர்ச்சியின் போது மனித தொடர்புகள் அல்கோரிதமாக மாறி வருவதற்கான அச்சுறுத்தல் காணப்படுவதாக போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.
வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தை கொண்டுள்ள நாட்டு தலைவர்களிடம் , தொழிநுட்ப வளர்ச்சியின் போது மனித உரிமைகளுக்கு முதலிடம் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.