இஸ்ரேலில் வெடிக்கும் போராட்டம்: பல்லாயிரக்கணக்காக மக்கள் வீதிக்கு இறங்கினர்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காசா போர் மற்றும் பலஸ்தீன பிரதேசத்திலுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வார இறுதியில் இஸ்ரேலின் மிகப்பெரிய நகரமான டெல் அவிவில் மக்கள் வீதிக்கு இறங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் சிலர் தேர்தலொன்றை வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஒவ்வொரு செயலும் இஸ்ரேலின் அழிவின் திசையில் உள்ளதெனவும் கடந்த வருடம் ஒக்டோபர் இடம்பெற்ற தாக்குதலுக்கும் அவர்தான் பொறுப்பு என ஓய்வு பெற்ற சிவில் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,ஜெருசலேமில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “போரை நிறுத்து” மற்றும் “நாம் அனைவரும் சமமாக உருவாக்கப்பட்டுள்ளோம்” உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதகளை ஏந்திவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெருசலேமில் உள்ள சிலர் காசா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நேரம் இதுவெனனவும் நாட்டின் அரசியல்வாதிகளால் சமத்துவத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் நம்புகின்றனர்.
ஹமாஸ் போராளிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட 251 பணயக்கைதிகளில் 116 பேர் காஸாவில் இருப்பதாக இஸ்ரேல் நம்புகிறது, 41 பேர் இறந்துவிட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறுகிறது.