தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன?
திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது
மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது
: வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்
: புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.