கவிதைகள்
“உங்களுக்கு பாடவே தெரியவில்லை” …. கவிதை …. முல்லைஅமுதன்.
உங்களுக்கு பாடவே தெரியவில்லை..
மகள் சொல்லிப்போனாள். கொப்பருக்கு ஆடவே வராது..பாட வருமா? மனைவி கிண்டலித்தது…உள்ளூர கேலி தெரிந்தது.. கண்ணாடி முன்னின்று அபிநயம் பிடித்து நின்ற போது சரியாக ஆடமுடியவில்லை.. சங்கீதம் படித்திருக்கலாம். நடனவகுப்புக்கு போய்வந்திருக்கலாம். குளியலறையிலும் உரக்கப் பாடினேன்.. பள்ளிநாட்களில் குரலெடுத்துப் பாடியதை நண்பர்கள் ரசித்தார்களே.. நாடகங்களில் நடிப்பிற்காக அபிநயித்தபோது பலரும் பாராட்டினார்களே.. ரசனை மாறியிருக்கிறதோ? மகளை,மனைவியை நொந்துகொள்வதா? யாரைப் பகைத்துக்கொள்ளமுடியும் சொல். நான் பாடுவேன்.. ஆடுவேன்… நாளை பேரர்கள் அவசியம் அனுசரிப்பார்கள். அறைக்குள் சென்று… ஆடினேன்..பாடினேன்.. நிலைக்கண்ணாடி ஆரவாரித்தது. அறையின் ஒவ்வொரு சுவர்க்கற்களும் ரசிகர்களாகினர்.முல்லைஅமுதன்