கவிதைகள்
“சாடுவோர் மீதொரு பாடல்”… கவிதை … சங்கர சுப்பிரமணியன்.
பாரதியை தூற்றிய உலகம்
இந்த பாமரனை தூற்றுவதில் என்ன விந்தை நெஞ்செ பொறுக்குதில்லையே இந்ந நிலைகெட்ட மாந்தரைஎண்ணி என்ற பாரதியையும் தூற்றிய உலகமும் இதுவன்றோநிலைகெட்ட மாந்தரை நிந்தை செய்தால் தலைவிரித்தாடுவோரை இங்கு கண்டு பாரதி சொன்னதுபோல் மோதி மிதிக்கமாட்டேன் முகத்திலும் உமிழ மாட்டேன் பாப்பாவுக்கு சொன்னததை பண்பட்டவனாய் நின்று நான் ஒருபோதும் செய்யமாட்டேன் நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற நக்கீரன் குற்றவாளி என்றால் நானும் குற்றவாளி என்றே பெருமை கொள்வேன் நண்பா சொல்பவன் யாரென்றறியும் சூத்திரம் கற்றவன் நான் ஆத்திரம் கொண்டே ஒருபோதும் அறிவை இழக்கமான்டேன் தினைத்துணை நன்றி செய்யினும் பனைத்துணையாய் காணும் பண்பட்டோர் மத்தியிலே பிறர் துன்பச்செயல் செய்திடினும் செய்நன்றி மறந்து செழிக்கவைத்தோரை தொய்வடையச் செய்யும் பாதகத்தை செய்யென்றாலும் செய்ய மாட்டேன் இடுக்கண் வருங்கால் நகுகவென இயம்பியவன் சொல்கேட்பேன் துன்பம் நேர்கையில் யாழெடுத்து மீட்ட சொன்னவன் வழிநிற்பேன் என்னைத் தரம் தாழ்த்த நினைத்து தரம் தாழ்ந்து போவோர் முன் நானும் அதைச்செய்து எய்தும் இழிநிலைக்கு செல்லமாட்டேன் தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்துக்கு வலிப்பது போல் உனக்கு நான் ஊறேதும் செய்யாதபோது மரமாகி நின்று நிந்தை செய்யும் மாட்சிமையை எங்கு கற்றாய் இடிப்பாரை இல்லாத ஏமார மன்னன்போல துடித்திடல் ஆகாதென்று குறள் சொல்வேன் ஆகச் சிறந்த அறிவாளியாம் உனக்கு அற்பனான இந்த ஏழைச்சொல் அம்பலமேறாது என்பதும் நானறிவேன் மூடனுக்கு புத்தி சொன்னால் கேடுவரும் என்ற முதுமொழியும் நான் மறவேன் போற்றுவார் போற்றலையும் தூற்றுவார் தூற்றலையும் கண்டவன் நான் காற்றிலே அடித்துவந்த குப்பையும் என்மேல் விழுந்து அசுத்தப்படுத்திடினும் குப்பையை தட்டிவிடும் குணமே நான் கற்ற கல்வி குளத்தின்மேல் கோபப்பட்டு செல்லும் அறிவிலி ஆகமாட்டேன் என்னை தூற்றுவதால் ஏகந்தம் கிடைக்குமென்றால் தூற்று நண்பா தூற்றி மகிழ்ந்துவிடு நான் உன்னை போற்றித் தொழுதிடுவேன் பொன்றுந் துணையும் புகழ் செய்வேன்!
-சங்கர சுப்பிரமணியன்.