கவிதைகள்
பாரதியும் நினைத்திருந்தால் போதையில் மிதந்திருப்பான்?… கவிதை …. சங்கர சுப்பிரமணியன்.
பாலும் நீரும் சேரும் வியப்பில்லை
உறவுகள் சேராது தனித்து நிற்பினும் சேராது என்று தெரிந்தும் முயன்றன் ஏதோ ஒரு நப்பாசையில் சுழன்றான நிராசை அதுவும் நிறைவேறவில்லை முடியாதென்று அவனுக்கு தெரிந்தும் அவன் எதற்காக முயன்று பார்க்கிறான் அவனாக முயன்று பார்க்கவில்லை முயன்று பார்த்திட உந்தப்பட்டான் நாயின் வாலை நிமிர்த்தவும் முடியுமா முடியாதுபோயின் நாயின் குற்றமாகுமா முயன்றவன் குற்றமே குற்றம் நாயிடமன்று பட்ட மரம் துளிர்ப்பதும் இங்கில்லையா பருவம் மாறி மழை பொழிவதில்லையா கெட்டவன் நல்லவனாய் மாறவில்லையா கெடுதலும் நல்லதாய் முடிவதுமில்லையா இவனைப் பார்த்து அவன் சிரிக்கிறான் அவனைப் பார்த்து இவன் சிரிக்கிறான் உதட்டில் மட்டும்தான் சிரிப்பு தெரியுது உள்ளத்தில் அதன் சுவடெதுவும் இல்லை இருவருக்கும் இங்கு ஒருவரை வைத்து ஆதாயமாய் ஒன்று இங்கு இருப்பதால் இந்த நாடகமிங்கே தங்கு தடையின்றி பொங்கும் பூம்புனலாய் பொங்கி ஓடுது உறவுகளுக்குள்ளே ஒருவரை ஒருவர் மறைமுகமாக மாய்த்திடும் மாயவுலகில் குருதியில் ஏற்படும் பந்தம் எல்லாமிங்கு குணம் கெட்டு நின்று கூத்தாடுகையில் இங்கிவனோ புதுவழி காண துடிக்கிறான் ஏதோ ஒரு புள்ளியிலேதான் இங்கே இருவருக்கும் இணைப்பென அறிவான் அவ்விணைப்பை இவன் மதிக்கும்போது அதை மிதித்தவனை எண்ணி அழுதால் மேன்மையும் உண்டோ இம்மேதினியில் குரல்வளையை நெறிப்பவனை நம்புவான் கூட உறவென்று வருபவனை உதறுவான் ஏதோ ஒன்றினால் அவன் மனதில் கசப்பு கசப்பின் காரணம் இவனல்ல என்றறிந்தும் இவனாகவே ஒரு கற்பனையை வளர்ப்பான் எடுத்து இயம்பிட இங்கு எவருமே இல்லை ஊர் இரண்டானால் கூத்தாடிக்கு நல்லதாம் இங்கு கூத்தாடி எவனென தெரிந்திடாமல் கூத்திலே மனம் மயங்கியுமே நிற்கின்றான் தன் நிழலையே இவன் நம்பவும் மறுக்கிறான் உள்ளொன்று புறமொன்று பேசும் மனிதரை எள்ளளவும் நம்பினால் ஏமாற்றம் மிஞ்சுமே இங்கே இன்னொரு பசு ஏமாந்து நிற்குதே பசுத்தோல் போத்தியதை பசுவென நம்புதே இரையாகும் போதுதான் வலியை உணருமா விரித்தது செங்கம்பளமல்ல என புரியுமா புலிக்குத் தெரியும் பசுவுக்கு வலை விரிக்க புலி வலை விரிப்பது தன் பசியை போக்கிட அப்பாவிப் பசுவதும் அதனையும் நம்பிடுதே எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் வீட்டிலே சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார் சாயம் வெளுத்தாலும் போதையில் இவர் மிதந்துமே கிடக்கிறார் பாரதியும் நினைத்திருந்தால் போதையில் மிதந்திருப்பான்! -சங்கர சுப்பிரமணியன்.