Featureநிகழ்வுகள்

தமிழர் திருநாள் 2020.

விக்டோரிய பல்கலாசார சமூகங்களை ஓரிடத்தில் ஒன்றிணைக்கும் – இயற்கையையும் கலாசாரங்களையும் கொண்டாடும் – முழுக் குடும்பத்திற்கும் களிப்புத் தரும் முழுநாள் நிகழ்வு !

விக்டோரியத் தமிழர்கள் தைப்பொங்கலை வருகின்ற ஜனவரி மாதம் 19ம் திகதி ,  காலை 8:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை ‘Gaelic Park, 324 Perry Road, Keysborough, Victoria 3173’ இல் கொண்டாடுகிறார்கள். பல் கலாசார அனுபவத்தை பகிருகின்ற , முழுக்  குடும்பத்திற்கும்  நாள் முழுவதும் களிப்புத் தருகின்ற, இலவச  நிகழ்வாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை  அடியாகக் கொண்ட  ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வகமாய் அமைகின்ற விக்டோரியாவில் இயங்குகின்ற பல தமிழ் அமைப்புக்கள், கேசி தமிழ் மன்றத்தின் ஒருங்கிணைப்பில் இணைந்து வழங்கும் இவ் நிகழ்வு,  விக்டோரியத் தமிழர்களின் உயிர்ப்பான இருப்பை பிரதிபலிக்கின்ற  தனித்துவமான – ஒன்றுபட்ட முகமாக அமைகின்றது என நம்புகின்றோம்.

இயற்கையை மதித்து நன்றி செலுத்துவது தமிழ் பாரம்பரியத்தின் உள்ளார்ந்த அம்சமாகும். இயற்கையையும் கலாசாரங்களையும் கொண்டாடும் இந்த நிகழ்வு பின்வரும் உள்ளக மற்றும் வெளியரங்க அம்சங்களை உள்ளடக்கியதாக அமைகின்றது.

·         ஊரெல்லாம் கூடி பல பானைகளில் பொங்கும் பெரும் பொங்கல்

·     விக்டோரியாவின் கலாச்சார பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் திறந்த மேடை நிகழ்ச்சிகள்

·         பாரம்பரிய விளையாட்டுகள்

·         அங்காடிகள்  – பாரம்பரிய உணவுகள், புடவை , சேவைகள் மற்றும் பல

·         சிறுவர்  பொழுதுபோக்கு

·         கண்காட்சிகள்

பெரும் பொங்கலில் உங்கள் வீட்டுப் பானை சேர்ந்திட – திறந்தவெளி மேடையில் உங்கள் திறமைகள் வெளிப்பட – பாரம்பரிய விளையாட்டுக்களில் இணைந்திட – தொண்டராய் கைகொடுத்திட அனைவரையும் அழைக்கின்றோம். இவை குறித்த  மேலதிக விபரங்களுக்கு  0403 436 970, 0429 120 973, 0466 816 746, 0412 069 096  எனும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக  17 பெப்ரவரி, 2020  முதல் 21 பெப்ரவரி, 2020  வரை விக்டோரிய பாராளுமன்றத்தில் பொங்கல் நிகழ்வும், ஒரு வார கால தமிழர் பாரம்பரிய கண்காட்சியும்  நடைபெறவுள்ளது. இது குறித்த மேலதிக விபரங்களை பின்னர் அறியத் தருவோம்.

தமிழர் திருநாள்  2020, கேசி தமிழ் சங்கத்தின்  ஒருங்கிணைப்பில்  விக்டோரிய மூத்த பிரசைகள் தோழமைக் கழகம், ஆஸ்திரேலிய தமிழர் கலையகம், ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலை சங்கம், யாழ்ப்பாணம்  இந்து கல்லூரி பழைய மாணவர் சங்கம் – விக்டோரியா, ஹாட்லி கல்லூரி பழைய மாணவர் சங்கம் – விக்டோரியா,தமிழ் மூத்த பிரசைகள் காருண்யக் கழகம்-விக்டோரியா , Tamil Picture Books,  மற்றும் பாடும் மீன் பழைய மாணவர் சங்கம் – விக்டோரியா என்பவற்றின் ஒருங்கிணைவில் நடைபெறுகின்றது.

############

ஊடக தொடர்புகளுக்கு:

கு.சிவசுதன்

தமிழர் திருநாள் 2020 ஏற்பாட்டுக் குழு

0403 474 145

vanakkam@tamilfestival.org.au

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.