இலங்கை
சுதந்திர கட்சியின் புதிய கூட்டணி 340 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடத் தீர்மானம்!
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட கூட்டணி வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 340 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயலாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
இதன்படி கதிரை சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதி வேட்புமனு தயாரிப்பின் போது கூட்டணிக்குள் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் யோசனைகள் கருத்தில் கொள்ளப்படும் என லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.