பெருமாளின் அருள் கிடைக்க ஆண்டாள் திருப்பாவை பாசுரம்!
பெருமாளின் அருளை பெறுவதற்குரிய மாதம் மார்கழி மாதம். அந்த மாதத்தில் பெருமாளின் சுப்ரபாதத்திற்கு பதிலாக பாடல்களை கேட்டுத்தான் கண் விழிப்பதாக சொல்லப்படுகிறது.
அப்படிப்பட்ட சக்திவாய்ந்த ஆண்டாளின் திருப்பாவையை நாமும் தினமும் பாடி வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.
திருமால் ஒருவரே ஆடவர் என்றும், இந்த உலக உயிர்கள் அனைத்தும் பெண்ணினத்தை சேர்ந்தவர்கள் என்றும், உலகத்தில் உள்ளவர்களின் நோக்கம், தனது நாயகனான திருவருளை அடைவது மட்டுமே என பொருள்படும் வகையில், 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் நாச்சியார் பாடி உள்ளார்.
அதனால் தான் சிறு வயது முதலே திருமாலையே தனது கணவனாக நினைத்து வளர்த்து, இறுதியில் அவரது திருவடிகளை சென்றடைந்ததாக சொல்லப்படுகிறது.
மார்கழி மாதம் தேவர்களின் விடியற்காலை பொழுது என சொல்லப்படுவதால், இந்த சமயத்தில் தேவர்களின் தலைவனான மகா விஷ்ணுவை வழிபட்டால் திருமாலின் அருளை மட்டுமின்றி தேவர்களின் ஆசிகளையும் பெறலாம்.
திருமணத்திற்காக காத்திருக்கும் இளம் பெண்களும், ஆண்களும் பாவை நோன்பு இருந்தால் நல்ல கணவன் அல்லது நல்ல மனைவி அமைந்து, விரைவில் திருமணம் கை கூடி வரும் என்பது ஐதீகம்.