பலதும் பத்தும்
ஒஸ்கர் பட்டியலில் இருந்து வெளியேறிய லாபட்டா லேடிஸ்
ஒஸ்கர்ஸ் 2025 விருதுக்கு நாடு முழுக்க 29 படங்களில் ஒரு படத்தை அனுப்பும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. 29 திரைப்படங்களை பார்த்த இந்திய திரைப்பட கூட்டமைப்பு ஒஸ்கர்ஸ் 2025 விருதுக்கு இந்தியா சார்பில் லாபட்டா லேடீஸ் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி ஒஸ்கர் 2025-க்கு தகுதியான படங்களின் பெயர்களை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட லாபட்டா லேடீஸ் திரைப்படம் இடம்பெறவில்லை. எனினும், சர்வதேச இணை தயாரிப்பில் வெளியான இந்தி மொழி திரைப்படமான சந்தோஷ் இடம்பெற்றுள்ளது.
“சிறந்த சர்வதேச திரைப்படம்” சந்தோஷ் திரைப்படம் சிறந்த சர்வதேச அம்சத்திற்கான தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளது.