உலகம்
நமீபியாவின் முதல் பெண் ஜனாதிபதி நந்தி தைத்வா; எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
நமீபியா நாட்டில் கடந்த மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தென்மேற்கு ஆபிரிக்காவின் மக்கள் அமைப்பு கட்சியின் சார்பாக போட்டியிட்ட துணை ஜனாதிபதி நெடும்போ நந்தி தைத்வா வெற்றியடைந்துள்ளார்.
சுமார் 57.3 சதவீத வாக்குகளைப் பெற்ற அவர் நமீபியாவின் முதல் பெண் ஜனாதிபதியாவார்.
அதுமட்டுமின்றி ஆபிரிக்க கண்டத்தின் இரண்டாவது பெண் ஜனாதிபதியும் ஆவார்.
அதேவேளை இத் தேர்தல் முடிவுகளுக்கு அந் நாட்டு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.