பலதும் பத்தும்

1,200 ரூபிக்ஸ் கியூப்களை பயன்படுத்தி அநுரவின் உருவப் படம்

1,200 ரூபிக்ஸ் கியூப்களை பயன்படுத்தி 91 அங்குல உயரமும் 68 அங்குல அகலமும் கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பாரிய உருவப்படத்தை உருவாக்கி சன்சுல் செஹன்ஷா லக்மால் என்ற 11 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார்.

அவர் இந்த சாதனையை 3 மணி நேரம், 13 நிமிடங்கள், 7 வினாடிகளில் செய்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார்.

சோழன் புக் ஒப் வேர்ல்ட் ரெக்கோர்ட்ஸ் (Cholan Book of World Records )மற்றும் பீப்பிள்ஸ் ஹெல்பிங் பீப்பிள் பவுண்டேஷன் (Peoples Helping People Foundation ) ஆகியவை இணைந்து நேற்று முன்தினம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

கம்பஹா, யக்கலவில் உள்ள ரணவிரு நீச்சல் தடாகத்தில் முகாமின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் மஹா துவாக்கர் மற்றும் பிரதி கட்டளை அதிகாரி பிரிகேடியர் வாசகே ஆகியோர் முன்னிலையில் இது நடைபெற்றது.

சன்சுலின் சாதனையை அங்கீகரிப்பதற்காக, அமைப்பாளர்கள், இராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து, சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம் ஆகியவற்றை வழங்கி கெளரவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.