தென்கொரிய ஜனாதிபதியை பதவி விலகக்கோரி போராட்டம்!
தென்கொரியாவில் எதிர்க்கட்சிகளை முடக்க கொண்டுவரப்பட்ட அவசர நிலைக்கு எதிராக, பாரளுமன்றத்தில் அதிகளவில் பாரளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததால், அந்நாட்டு ஜனாதிபதிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அமுல்படுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவசர நிலையை ஜனாதிபதி யூன் சுக் இயோல் திரும்பப் பெற்றார்.
இந்நிலையில் அவர் பதவி விலகக்கோரி போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது.
கொரிய தீபகற்பத்தில் தென்கொரியா அமைந்துள்ளது. இது அமெரிக்கா, ஜப்பானின் கூட்டணி நாடாக உள்ளது.
அதே தீபகர்ப்பத்தில் அமைந்துள்ள மற்றொரு நாடான வடகொரியா இதற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது.
வடகொரியா ரஷ்யா மற்றும் சீனா நாடுகளுடன் இணக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இதனால், அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நீண்டகால பனிப்போர் சூழல் காணப்படுகிறது.
இந்த நிலையில், வடகொரியாவுடன் சேர்ந்து கொண்டு அரசை முடக்க எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் என தென்கொரிய ஜனாதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ராணுவ தலைவர், முக்கிய தளபதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஆலோசனை மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கான கட்டுப்பாட்டை தங்கள் கைவசம் கொண்டு வந்து தடுப்புகளை அமைத்தனர்.
எனினும், உறுப்பினர்களை வரும்படி எதிர்க்கட்சி தலைவர் அழைப்பு விடுத்ததுடன், அவசரநிலை அறிவிப்பை நீக்குவதற்காக வாக்களித்தனர். இந்த சூழலில், தென்கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் இயோல் தொலைக்காட்சி வழியே உரையாற்றினார்.
அப்போது அவர், அவசரநிலையை வாபஸ் பெறும்படி சில நிமிடங்களுக்கு முன்பு வலியுறுத்தப்பட்டது. அவசரநிலை நடவடிக்கைகளுக்காக குவிக்கப்பட்ட ராணுவ வீரர்களை வாபஸ் பெற்றுள்ளோம். பாராளுமன்றத்தின் கோரிக்கையை ஏற்று, அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பு அவசரநிலை வாபஸ் பெறப்படும் என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து தென்கொரியாவில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலையை நீக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுவுள்ளது.