அலுவலகத்தில் இதெல்லாம் பேசுறீங்களா?
அதிகரித்த பொருளாதார செலவுகளின் காரணமாக நம்மில் பல பேர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, நாம் வீட்டில் இருக்கும் நேரத்தை விட அலுவலகத்தில் செலவு செய்யும் நேரம் தான் அதிகம்.
இவ்வாறு இருக்க அலுவலகத்தில் சில விடயங்கள் தொடர்பில் நாம் பேசக் கூடாது.
அரசியல்
அரசியல் நம்பிக்கைகள் ஆளுக்காள் வேறுபடும். இது தொடர்பில் சக பணியாளர்களுடன் விவாதிக்கும்போது அது அவர்களுக்கும் உங்களுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தும்.
பணம்
உங்களின் தனிப்பட்ட பண விபரங்கள் அலுவலகத்தில் சக பணியாளர்களிடையே ஒரு வித ஏற்றத்தாழ்வை உண்டு பண்ணலாம். இது மற்றவர்களின் வெறுப்பை சம்பாதிக்க காரணமாக அமைந்துவிடும்.
வதந்திகள்
அலுவலகத்தில் ஒருவர் மற்றொருவரைப் பற்றி தேவையற்ற வதந்திகளை பரப்புதல் ஆரம்பத்தில் பொழுதுபோக்காக இருக்கும். ஆனால், நாளடைவில் அது வேலையில் உங்கள் கவனத்தை சிதைக்கும். அத்துடன் சக ஊழியர்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கையும் குறையும்.
குடும்பப் பிரச்சினை
அனைவருக்கும் குடும்பப் பிரச்சினை உள்ளது. ஆனால், அருகில் இருக்கும் பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்வது சரியாக இருக்காது. சில வேளைகளில் அது நமக்கே பிரச்சினையாக அமையலாம்.
அந்தரங்கம்
பணியிடங்களில் அந்தரங்க விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடக் கூடாது. காரணம் அனைவருக்கும் புரிதல் ஒரே மாதிரியாக இருக்காது.
மதம்
அவரவருக்கு அவரவர் மதம் முக்கியமானது. இவ்வாறு இருக்கும் சந்தர்ப்பத்தில் ஒருவரது நம்பிக்கையை உடைக்கும் அளவு மதம் தொடர்பிலான கருத்துக்களை முன்வைப்பதை தவிர்க்க வேண்டும்.