29 நிறுவனங்களில் முதலீடு… உலகின் பெரும் கோடீஸ்வரர் ரேகா
இந்தியாவிலேயே பெண் கோடீஸ்வரர்களில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் ரேகா ஜுன்ஜுன்வாலா.
பெரும் கோடீஸ்வரர்களில்
இவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது. இந்திய பண மதிப்பில் தோராயமாக ரூ 66,000 கோடி).
இவரது இந்த உச்ச நிலைக்கு காரணம், கடந்த 2022ல் இவரது கணவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா திடீரென்று மரணமடைந்ததை அடுத்து, அவரது முதலீடுகள் மற்றும் சொத்துக்கள் என அனைத்தும் ரேகா கைவசம் வந்தது.
இதன் பின்னரே, இவர் உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக அறியப்பட்டார். மட்டுமின்றி, சுமார் 29 நிறுவனங்களில் இவர் முதலீடு செய்துள்ளார்.
மேலும், மலபார் ஹில்லில் உள்ள அவரது RARE Villa என்ற சொகுசு மாளிகையில் இருந்து அரபிக்கடலின் அழகை இடைவிடாது ரசிக்கும் பொருட்டு ரூ 118 கோடி முதலீடு செய்து கட்டிடம் ஒன்றை சொந்தமாக்கியுள்ளார்.
தோராயமாக ரூ 41,000 கோடி
1963 செப்டம்பர் மாதம் பிறந்த ரேகா, மும்பை பல்கலைக்கழகத்தில் பட்டதாரி ஆவார். 1987ல் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா என்ற பங்குச்சந்தை முதலீட்டாளரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு Nishtha என்ற மகளும், இரட்டையரான Aryaman மற்றும் Aryaveer என்ற மகன்களும் உள்ளனர். கடந்த 2022ல் தமது 62வது வயதில் ராகேஷ் இறக்கும் போது அவரது சொத்து மதிப்பு தோராயமாக ரூ 41,000 கோடி என்றே தெரியவந்துள்ளது.