சஜித்திடம் தலைமையை ஒப்படைப்பாரா ரணில் ?

ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்கத் தயாராக இருந்தால், மீண்டும் சிறிகொத்தவுக்கு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், ரணில் விக்ரமசிங்க இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவுடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க உட்பட நாம் அனைவரும் இந்த வலதுசாரி அரசியல் குழுக்களுடன் இணைந்து கொள்ள வேண்டும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இக்கட்சியுடன் ஒன்றிணைந்து இந்தப் பிரிவினையை இல்லாதொழித்து எதிர்காலத்தில் ஒரே வேலைத்திட்டத்தை முன்வைக்க பாடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐ.தே.க குழுக்கள் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *