வாக்குப் பெட்டிகள்; இன்று பகிர்ந்தளிப்பு
பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் இன்று புதன்கிழமை மாலை மாவட்டத் தேர்தல் அலுவலகங்களில் இருந்து உரிய வாக்குச் சாவடிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளன.
தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் 13,383 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் 3 மணியின் பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் இருந்து உரிய வாக்குச் சாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள் கொண்டுசெல்லப்பட உள்ளன.
வாக்குச் சாவடிகளாக பயன்படுத்தப்படும் அனைத்து பொது இடங்களும் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் உரிய பொலிஸ் பிரிவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
வாக்குப் பெட்டிகள் வாக்குச் சாவடிக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் வாக்குச் சாவடிகளின் பாதுகாப்பை பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸார் விசேட பொறிமுறையொன்றை வகுத்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பெட்டிகளிலேயே பொதுத் தேர்தலிலும் பயன்படுத்தப்படுகிறது. மொத்தமாக 15ஆயிரம் வரையான வாக்குக் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்முள்ளது.
நாளை வியாழக்கிழமை 10ஆவது நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. 160 நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து 196 பேர் நேரடியாகவும் 29 பேர் தேசியப் பட்டியல் ஊடாகவும் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட உள்ளதுடன், 17.1 மில்லியன் மக்கள் இம்முறை வாக்களிக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.