இலங்கை
வடக்கை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்த சிங்களக் கட்சி
இலங்கையில் இதுவரையில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் சிங்களக் கட்சியொன்று வடக்கின் ஆதிக்கத்தை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
வியாழக்கிழமை நடந்து முடிந்த பாராளுமன்றத்திற்கான தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியே வடக்கு மாகாணத்திலுள்ள 12 பாராளுமன்ற ஆசனங்களில் தனி ஒரு கட்சியாக 5 ஆசனங்களைக் கைப்பற்றியே இந்த வரலாற்று சாதனை படைத்துள்ளது.
யாழ்,கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தொகுதியில் உள்ள 6 ஆசனங்களில் 80830 வாக்குகளைப்பெற்றதன் மூலம் 3 ஆசனங்களையும் வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் உள்ள 6 ஆசனங்களில் 39,894 வாக்குகளைப்பெற்றதன் மூலம் 2 ஆசனங்களையும் என தேசிய மக்கள் சக்தி 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.