இலங்கை

வவுனியா குடிவரவு திணைக்களத்தின் அவல நிலை; இரவு பகலாக வரிசைகளில் நிற்கும் மக்கள்

வவுனியா நகர்பகுதியில் அண்மையில் இடம் மாற்றப்பட்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்கள காரியாலயத்தில் தொடர்ந்தும் மக்கள் கடவுச்சீட்டுகளை பெற வரிசைகளில் நிற்கவேண்டிய நிலை நீடித்து வருகின்றது

வெறுமனே 25-20 நபர்களுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுக்காக நாள் ஒன்றுக்கு சுமார் 700 தொடக்கம் 1000 பேர் வரையில் இரவு பகலாக வரிசைகளில் நிற்க வேண்டிய அவல நிலை நீடித்து வருகின்றது

அரசாங்கம் அண்மையில் கடவுச்சீட்டுக்களை பெறுவதில் உள்ள தாமதங்கள் நீக்கப்படும் என அறிவித்திருந்த போதிலும் இதுவரை எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை என்பதுடன்,

அசுத்தமான பகுதிகளில் மக்கள் தொடர்சியாக வரிசையில் நிற்கின்றார்கள்.

குறிப்பாக அப்பகுதியில் உள்ள கால்வாயில் கழிவு நீர் ஓடாமல் தேங்கிநிற்பதுடன் துர்நாற்றம் வீசி வருகின்றது.

அத்துடன் அப்பகுதியில் டெங்கு நுளம்பும் பெருகி காணப்படுகின்றது.

ஆனாலும் இது தொடர்பில் வவுனியா நகர சபையோ குடிவரவு குடியகல்வு திணக்களமோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

வயோதிபர்கள் தொடக்கம் கர்பிணி தாய்மார்கள், சிறுகுழந்தைகளுடனான பெற்றோர்கள் என இரவு பகல் பாராது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வீதி முழுவதும் வரிசையில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி நிற்கின்றார்கள்

இந்த நிலையில் இன்றைய தினம் அப்பகுதிக்கு சென்ற தமிழரசு கட்சியின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளரும் சட்டத்தரணியுமான டினேஸன் பார்வையிட்டதுடன் மக்களுடன் கலந்துரையாடி இருந்தார்.

அதேநேரம் குடிவரவு குடியகல்வு திணைக்களம் நாள் ஒன்றுக்கான சேவையின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதுடன், பணம் பெற்று டோக்கன் வழங்கும் நபர்களையும் தடுக்க வேண்டும் என்பதுடன் அசுத்தமாக காணப்படும் இப்பகுதிகளை சுத்தம் செய்யவும் நகரசபை முன்வர வேண்டும் என கோரிக்கையையும் சட்டத்தரணி டினேஸன்  முன்வைத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.