செய்திகள்

அம்பாறை மாவட்ட தமிழர்கள் தமது இருப்பை இம்முறை காப்பாற்றி அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்

அம்பாறை மாவட்ட தமிழர்கள் தமது இருப்பை இம்முறை காப்பாற்றி அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரன் தெரிவித்தார்.

கல்முனை குருந்தையடியில் அண்மையில் நடைபெற்ற முதலாவது வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை தமிழரசுக் கட்சிக்காக அம்பாறை மாவட்டத்தில் உழைத்த 10 வேட்பாளர்களுக்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இம்முறை அம்பாறை மாவட்ட தமிழர்கள் தமது இருப்பை காப்பாற்றி இருக்கின்றார்கள். அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு நன்றிகள்.

எனினும் 50 வீதத்துக்கு மேலானவர்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்த தவறியுள்ளனர். இது மிகவும் கவலைக்குரிய விடயம். எமது மாவட்ட நிலைமையை கருத்திற் கொண்டு நிச்சயமாக அவர்களுக்கு வாக்களித்திருக்க வேண்டும். ஆனால் 50 வீதமான தமிழ் வாக்காளர்கள் வாக்களிப்பில் அக்கறை காட்டவில்லை. உண்மையில் இது மனவருத்தத்துக்குரிய விடயம். எதிர்காலத்தில் இப்படியான அரசியல் விருப்பில்லாத தன்மை மற்றும் அலட்சியம் இருக்கக் கூடாது. வாக்களித்த அனைவருக்கும் மீண்டும் நன்றிகளை கூறுகின்றேன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.