இலங்கை

ராஜபக்ஷ குடும்பத்தினருக்காக மூடிய அறைக்குள் பெரும் சதித் திட்டம்

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நடந்த ராஜபக்ஷ குடும்பத்தினரின் அரசியல் சதித்திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறும், இதில் தொடர்புடையவர்கள் மீதான குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை தொழிலாளர் மக் சுன் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

ஹட்டனில்  நடை பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப் பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின் உணர்வுகளையும் மதப்பற் றையும் பயன்படுத்தி அரசியல் அதிகா ரத்தைக் கைப்பற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் நாட்டு மக்களுக்கு அம்பலப்
படுத்தப்பட வேண்டும்.

பௌத்த மதத்தையும் சிங்கள பௌத்த அரசையும் பாதுகாப்பதாகக் கூறி கடந்த சில நாட்களாக முன்னெடுக்க முயற்சி க்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம், ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலின் மற்றுமொரு நகர்வாகும்.
கடந்த காலங்களில் இந்நாட்டு மக்க ளைப் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக் கி. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்ற அதிகார வெறிகொண்ட அரசியல் குழுவொன்றின் வழிநடத்தலிலேயே இந்த நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்ட தாக நாங்கள் நம்புகிறோம். கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்றதாகக் கூறப்படும் மூடிய அறைச் சந்திப்பு தொடர் பில் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள், இதன் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கங்கள் குறித்து பாரிய சந்தே கங்களை ஏற்படுத்தியுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்கு தல்களில் 300-க்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்கள் காவுகொள்ளப்பட்ட பின்ன ணியில், அரசியல் அதிகாரத்தைக் கைப் பற்றுவதற்காக மக்களின் உணர்வுகள் தூண்டப்பட்ட அரசியல் போக்கை ஒத்த வகையில், தற்போதும் இவ்வாறான இர கசியச் சந்திப்புகளும் நடவடிக்கைகளும் அரசியல் இலாபங்களைப் பெற்றுக்கொள் வதற்காகப் பயன்படுத்தப் படுகின்றனவா என்பது குறித்து விரிவான விசாரணை நடத் தப்பட வேண்டும்.
கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற தாகக் கூறப்படும் இந்த இரகசியக் கலந்து
ரையாடலில் கலந்து கொண்டவர்கள் யார், அங்கு விவாதிக்கப்பட்ட விடயங்கள் என் ன, அதன் உண்மையான நோக்கம் என்ன என்பன குறித்து பாதுகாப்புத் தரப்பினரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.

விசாரணைகளின் மூலம் சட்டமீறல்கள் இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட் டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அவர்க ளைக் கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வ தேசஉடன்படிக்கைச் சட்டம் (ICCPR) உள் விட்ட பொருத்தமான சட்டக் கட்டமைப் பின் கீழ் இவ்விடயங்கள் விசாரணைக்கு
உட்படுத்தப்பட வேண்டும்.

நாட்டின் மக்களின் மதப்பற்றையும் உணர்வுகளையும் சுயநல அரசியல் அதிகா ரத்தைப் பெறுவதற்காகப் பயன்படுத்தும் அனைத்து முயற்சிகளும் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். இவ்வா றான ஊழல் மற்றும் சதித்திட்ட அரசியல் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவரு வதற்காகவே மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆணையளித்துள்ளனர்.

எனவே, ஜனாதிபதி உள்ளிட்ட பொறுப் புவாய்ந்த அதிகாரிகள் உடனடியாகத் தலை யிட்டு, கிங்ஸ்பரி ஹோட்டல் சந்திப்பு தொடர்பில் முழுமையான விசாரணையை நடத்தி, அதன் உண்மையான பின்னணியை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *