காச நோய்: தமிழகத்தில் 75,702 பேர் பாதிப்பு
தமிழகத்தில் இந்த ஆண்டில் 75,702 பேர் காசநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசநோயை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்குடன் மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.
2025 ஆம் ஆண்டுக்குள் இந் நோயை முற்றிலுமாக இல்லாமல் செய்ய வேண்டும் என்ற இலக்குடன் பல விழிப்புணர்வு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந் நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 84 சதவீதமானோரை முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்துவதாகவும் தொடர் சிகிச்சைகளினால் மீதியானவர்களை குணப்படுத்துவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி நிகழாண்டில் தனியார் மற்றும் அரச மருத்துவமனைகளில் காசநோயினால் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, சுமார் 21 இலட்சத்துக்கும் அதிகமானோர் நாடளாவிய ரீதியில் இந் நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
அதன்படி, தமிழகத்தில் 75,702 பேருக்கு நோய் தாக்கம் இருந்ததோடு, அவர்களுள் 24,685 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 50,837 பேர் அரச மருத்துவமனைகளிலும் முதல்கட்ட சிகிச்சை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.