பலதும் பத்தும்

உலகிலேயே முதன்முறையாக புருவம் வழியாக மூளையிலிருந்த கட்டியை அகற்றி சாதனை

ஒருவருக்கு மூளையில் கட்டி ஏற்படும்போது, அவரது தலைமுடியை மழித்து, மண்டையோட்டில் துளையிட்டு மருத்துவர்கள் அந்தக் கட்டியை அகற்றுவது வழக்கம்.

அந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள நீண்ட நேரம் தேவைப்படுவதுடன், அந்தக் காயம் ஆறுவதற்கும் நீண்ட காலம் ஆகும்.

ஆனால், உலகிலேயே முதன்முறையாக, அப்படி எதுவும் செய்யாமல், ஒரு பெண்ணின் மூளையில் ஏற்பட்டிருந்த புற்றுநோய்க் கட்டியை புருவம் வழியாக அகற்றி சாதனை படைத்துள்ளார் மருத்துவர் ஒருவர்.

புருவம் வழியாக மூளையிலிருந்த கட்டியை அகற்றி சாதனை
ஸ்கொட்லாந்து அரசு மருத்துவமனையில் பணிபுரியும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான Anastasios Giamouriadis என்பவர்தான் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

Aberdeen என்னுமிடத்தைச் சேர்ந்த Doreen Adams (75) என்னும் பெண்மணியின் மூளையில் உருவாகியிருந்த புற்றுநோய்க் கட்டியை, மருத்துவர் Anastasios, அவரது புருவத்தில் துளையிட்டு அதன் வழியாக அகற்றியுள்ளார்.

உலகிலேயே முதன்முறையாக புருவம் வழியாக மூளையிலிருந்த கட்டியை அகற்றி சாதனை | Eyebrows Remove Brain Tumour Surgeryஇந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நோயாளி இரண்டு நாட்களில் கூட வீடு திரும்பிவிடலாம் என்பதுடன், ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் சாதாரண வாழ்வையும் வாழத்துவங்கிவிடலாம் என்பது கூடுதல் நல்ல செய்தியாகும்!

இதுவரை 48 நோயாளிகளுக்கு இந்த முறையில் மூளையிலிருந்த கட்டிகளை அகற்றியுள்ளதாக தெரிவிக்கும் Anastasios, பெரிய ஆப்பிள் அளவுள்ள கட்டிகளைக் கூட இவ்வகையில் அகற்றமுடியும் என்கிறார்.

தலைமுடி அகற்றப்பட்டு, பல மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவரும் களைத்து, நோயாளியும் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பணமும் அதிகம் செலவாகி, பெரிய தழும்பையும் சுமந்துகொண்டு, இப்படி பல கஷ்டங்கள் மூளை அறுவை சிகிச்சையில் காணப்படும் நிலையில், மருத்துவர் Anastasiosஇன் இந்த புதிய அறுவை சிகிச்சைமுறை, நோயாளிகளுக்கு பெரும் வரப்பிரசாதம் எனலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.