டுபாய் பாலைவனத்தில் உபர் மூலம் ஒட்டக சவாரி!
டுபாய் அதன் உயரமான வானளாவிய கட்டிடங்கள், சுற்றுலா மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறை போன்றவற்றால் மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் டுபாய் தொடர்பில் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் காணொளி ஒன்று சமூக ஊடக தளத்தில் பயனாளர்களின் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
வீடியோவில், டுபாயின் பாலை வனப் பகுதியின் நடுவில் சிக்கித் தவிக்கும் இரண்டு பெண்கள், போக்குவரத்துக்காக அவர்களின் கையடக்கத் தொலைபேசியில் உபெர் பயன்பாட்டு செயலியை திறக்கு முடிவு செய்கிறார்.
இதன்போது அவர்கள், உபெர் செயலியில் கார்கள், மோட்டார் சைக்கிள்களுக்கு மத்தியில் எதிர்பாராத விதமாக ஒட்டகத்தில் சவாரி மேற்கொள்ள முன் கட்டளை (ஆர்டர்) மேற்கொள்கின்றனர்.
முன் கட்டளையின் சில நிமிடங்களுக்குப் பின்னர், ஒரு ஆண் ஒட்டகத்துடன் வந்து, பெண்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
அல் படேயர், டுபாய்-ஹட்டா வீதியில் படமாக்கப்பட்ட இந்தக் காணொளி சமூக ஊடகத் தளமான இன்ஸ்டாகிராமில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், 97,470 விருப்புகளையும் பெற்றுள்ளது.
அத்துடன், ஜெட்செட் டுபாய் இன்ஸ்டாகிராம் கணக்கால் பகிரப்பட்ட இந்தக் காணொளி விரைவாக வைரலாகி, மூன்று மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்து.
சூழ்நிலையின் விசித்திரமான தன்மையால் பலர் மகிழ்ந்தாலும், பலர் காணொளியின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்புகின்றனர்.
இந்த நிலையில் காணொளியின் நம்பகத்தன்மையை அல்லது இடுகையில் விவரிக்கப்பட்டுள்ள சூழ்நிலையின் சுயாதீனம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
https://www.instagram.com/reel/DA8275AyXwN/?utm_source=ig_web_copy_link