சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஐவர் உயிரிழப்பு
கனழையின் காரணமாக பெங்களூரில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்துள்ளது.
பெங்களூரில் பாபுசாபல்யா பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
செவ்வாய்க்கிழமை 20 பணியாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கட்டிடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
தகவல் தெரிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸாரும் மீட்புக் குழுவினரும் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீட்புப் பணிகளை தொடங்கினர்.
முதற்கட்டமாக மூன்று தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் 13 தொழிலாளர்கள் இலேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதோடு மீதமுள்ள நால்வரை மீட்கும் பணிகள் தொடர்கின்றன.
இந்நிலையில் கட்டிட உரிமையாளரையும் அவரது மகனையும் பொலிஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நான்கு மாடிகள் கட்டிடம் கட்ட அனுமதி பெற்று ஏழு மாடிகள் கட்டியதாக உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.