முச்சந்தி

அர்ச்சுனா எம்.பி. நீதிமன்றில் சரண்

யாழ் மாவட்டஎம்.பி.யான வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை மீளப்பெற்றுள்ளது.

2021 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி நடந்த வீதி விபத்து தொடர்பாக நீதிமன்றில் ஆஜராகத் தவறியதற்காக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் அண்மையில் பிடியாணை பிறப்பித்தது.

இதனையடுத்து வைத்தியர் அர்ச்சுனா நேற்று நீதிமன்றில் சரணடைந்த நிலையில் அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருந்த நிலையில் நீதிமன்றத் திகதியை மறந்துவிட்டதாக நீதிமன்றில் தெரிவித்தார்.

இதனையடுத்தே மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா, வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெற்றார்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.