பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்த ஜனாதிபதி விசேட பணிப்பு
பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்தும் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் வழக்குகளை நீக்குவதற்கான தலையீடுகளை சட்டமா அதிபரை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
”தலைதூக்கி வரும் பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்தும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப்படையினருக்கு எதரிாக 17 வழக்குகள் தாக்கல் செய்யப்டுள்ளன. இந்த வழக்குகளுக்கு அதிகாரிகள் தங்கள் சொந்தப்பணத்தை செலவு செய்ய வேண்டியுள்ளது.
இதனால் சில அதிகாரிகள் பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்தும் செயல்பாடுகளில் இருந்து விலகச் சென்றுள்ளனர். ஆகவே, அவர்களுக்கு எதிராக குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை நீக்கவும் அவர்கள் தொடர்ந்து செயல்படவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.” சந்திப்பில் கலந்துகொண்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் சட்டமா அதிபரை தலையீடுகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, இந்த வழக்குகளை நீக்குவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து பாதாள உலக குழுக்களை அழிக்கும் செயல்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான ஆலோசனையையும் வழங்கினார்.