இந்தோனேசியாவின் 8 ஆவது ஜனாதிபதியாக பிரபோவோ பதவியேற்பு!
முன்னாள் இராணுவ ஜெனரல் பிரபோவோ சுபியாண்டோ இந்தோனேஷியாவின் எட்டாவது ஜனாதிபதியாக ஞாயிற்றுக்கிழமை (20) பதவியேற்றுள்ளார்.
பதவியேற்பின் பின் உரையாற்றிய அவர், நாட்டைப் பாதிக்கும் ஊழல் போன்ற உள் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதாகவும், மேலும் தன்னிறைவு பெறுவதாகவும் உறுதியளித்தார்.
பிரபோவோவின் அமைச்சரவையில் 100 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் 48 அமைச்சகங்கள் உள்ளன.
இதில் ஸ்ரீ முல்யானி இந்திராவதி மீண்டும் நிதியமைச்சராகவும், பஹ்லில் லஹடாலியா எரிசக்தி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.
இரண்டு முறை ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற பிரபோவோ இறுதியாக பிப்ரவரி தேர்தலில் இரண்டு போட்டியாளர்களுக்கு எதிராக 58% வாக்குகளைப் பெற்ற பின்னர் மிக உயர்ந்த பதவிக்கு சென்றார்.
73 வயதான அவர், ஒரு முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்து, உரிமை மீறல்களில் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, தேர்தலில் வெற்றி பெற்று, 280 மில்லியன் மக்களைக் கொண்ட நாட்டை வழிநடத்துவது வரை குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளார்.