வெடிகுண்டு மிரட்டல்; கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
மும்பையில் இருந்து பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு பயணித்த A320 Neo விமானமான UK 131 என்ற விஸ்டாரா விமானத்தில் வெடிகுண்டு அச்சம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து எந்த அச்சுறுத்தலும் இல்லையென ஏர்போர்ட் & ஏவியேஷன் சர்வீசஸ் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் (ஏஏஎஸ்எல்) உறுதிப்படுத்தியுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்திய விமான சேவை நிறுவனமான விஸ்தாரா ஏர்லைன்ஸின் விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
அந்த விமானம் மும்பையில் இருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்திலிருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, லண்டன் நோக்கி பயணித்த விஸ்தாரா விமான சேவைக்கு சொந்தமான விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஜேர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.