பலதும் பத்தும்

அவுஸ்திரேலியாவில் கோலியின் 7 வது டெஸ்ட் சதம்; சச்சினின் சாதனை முறியடிப்பு!

பேர்த்தில் நடைபெறும் முதல் டெஸ்டின் 3 ஆவது நாளில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 487 ஓட்டங்களை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.

இந்த இன்னிங்ஸில் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி ஒரு வரலாற்று சதத்தை அடித்தார்.

இப்போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற மொத்தம் 534 ஓட்டங்கள் தேவை என்ற நிலை உள்ளது.

விராட் கோலி ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 161 ஓட்டங்களையும், கே.எல் ராகுல் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி முறையே 77 மற்றும் 38 ஓட்டங்களையும் இந்திய அணி சார்பில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிகளவாக பெற்றுக் கொண்டனர்.

விராட் கோலியின் சதம்

2011 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடத் தொடங்கிய விராட் கோலி, அந்த நாட்டில் பெற்றுக் கொண்ட 07 ஆவது டெஸ்ட் சதம் இதுவாகும்.

இதன் மூலம் விரட் கோலி, அவுஸ்திரேலியாவில் அதிகளவான டெஸ்ட் சதங்களை அடித்த ஆசிய கிரிக்கெட் வீரராக இருந்த சச்சின் டெண்டுல்கரின் (06 சதம்) சாதனையை முறியடித்தார்.

ஒட்டுமொத்தமாக சர்வதேச டெஸ்ட் அரங்கில் விராட் கோலி பூர்த்தி செய்யும் 30 ஆவது சதம் இதுவாகும்.

36 வயதான அவர் தனது 81 ஆவது சர்வதேச சதத்திற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருந்தது.

இதன் மூலம் விராட் கோலி தனது டெஸ்ட் சதத்திற்காக கிட்டத்தட்ட 15 மாத காத்திருப்பை முடித்தார்.

இறுதியாக 2023 ஜூலையில் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி சதம் அடித்திருந்தார்.

இதனிடையே, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ஓட்டங்களை முடிக்க விராட் கோலிக்கு 21 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அவர் இரண்டாவது இன்னிங்ஸின் போது 16 ஓட்ட நிலையில் இந்த மைல்கல்லை எட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.