இலங்கை திவாலாகவில்லை !.. காசெல்லாம் வெளிநாடுகளில்… ஜீவன்
உலகில், ஓய்வு பெற்ற ஜனாதிபதிகள், பிரதமர்கள், பல்வேறு சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். உலக அமைதிக்காக , போரிடும் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
அவ்வாறான ஒரு மாநாட்டில் இலங்கையின் வங்குரோத்து நிலை குறித்தும் பேசப்பட்டது.
இலங்கைக்கு பணம் கொடுத்து உதவுவோம் என முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்தார்.
உகண்டாவின் முன்னாள் அதிபர் எழுந்து “எங்கள் நாட்டில் வைப்பிலிட்டுள்ள இலங்கை பணத்தை, அந்த நாட்டுக்கே திருப்பிக் கொடுக்க முடியும்.” என்றார்.
“எங்கள் வங்கிகளில் உள்ள இலங்கைப் பணத்தையும் என்னால் கொடுக்க முடியும்.” இவ்வாறு சீஷெல்ஸின் முன்னாள் அதிபரும் கூறினார்.
படிப்படியாக அனைத்து நாடுகளின் தலைவர்களும் அந்தந்த நாடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கைப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க சம்மதித்தனர்.
“என்ன இருந்தாலும், இலங்கை திவாலாகவில்லை. பணம் எல்லா இடங்களிலும் இருக்கிறது.” ஒபாமா ஆச்சரியத்தோடு வியந்தவாறு சொன்னார்.
“இலங்கை என்ற நாடு திவாலாகிப் போனாலும், இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர்கள் திவாலாகாமல் இருந்துள்ளார்கள்”
ஓரு டொலர் இருந்தால் காட்டுங்கள் எனவும் , இருந்தால் கொண்டு வாங்க எனவும் சொன்ன தலைக்கும் , வாலுக்கும் இது டிரேலர் மட்டும்தான்.