“சீனாவை விட இந்தியா அதிகம் வரி விதிக்கிறது”; மோடி மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு
இறக்குமதி பொருட்களுக்கு சீனாவை விட இந்தியா அதிக வரிவிதிப்பதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 05 ஆம் திகதி அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் குடிரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பும் ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஹும் தீவிர பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் டெட்ராய்ட் நகரில் ஈடுபட்ட ட்ரம்ப் நமது நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்குச் சீனா 200 சதவீதம் வரை வரி விதிக்கிறது என்றும் பிரேசிலும் அதிக வரி விதிக்கிறது என குற்றம் சுமத்தினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ட்ரம்ப்,
“இந்தியா, சீனாவை விட அதிக வரி விதிக்கிறது, இந்தியா- அமரிக்கா இடையே சிறந்த உறவு இருந்தும், அதுவும் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட முறையில் நல்ல நெருக்கும் இருந்தும் அவர்கள் அதிக இறக்குமதி வரியை விதிக்கின்றனர்.
நான் தேர்தலில் வென்றால் அதிக இறக்குமதி வரி விதிக்கும் நாடுகளுக்கு நிகராக அந்நாட்டிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரியை உயர்த்துவேன்” என கூறியுள்ளார்.