லெபானானில் உள்ள ஐ.நா அமைதிப் படை படை மீது இஸ்ரேல் தாக்குதல்: 22 பேர் பலி
லெபனானில் ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்கால அமைதிப் படை படையினர் மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தால் மத்திய கிழக்கே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
பதிலுக்கு இஸ்ரேல் இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட அண்மைய தாக்கதலில் 22 பேர் உயிரிழந்தனர்.மேலும் 100 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
அத்துடன் தெற்கு லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்கால அமைதிப் படையினரின் (UNIFIL) தலைமையகம் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்கால அமைதிப் படை வீரர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த வீரர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிடவில்லை.