கலிபோர்னிய ஏரியில் $540 பில்லியன் டொலர் பெறுமதியான பொக்ஷிம் கண்டுபிடிப்பு!
தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு பெரிய ஏரியின் அடிப்பகுதியில் 540 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான லித்தியத்தின் மிகப்பெரிய இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த உலோகம் பெரும்பாலும் “வெள்ளை தங்கம்” என்று அழைக்கப்படுகிறது.
அமெரிக்க மாநிலத்தின் மிகப்பெரிய ஏரியான சால்டன் கடல், அந்நாட்டு எரிசக்தி துறையின் நிதியுதவியின் ஒரு பகுதியாக விஞ்ஞானிகளால் ஆய்வு செய்யப்பட்டது.
வெள்ளை மணல் போன்ற தோற்றத்தால் காணப்படும் லித்தியம் ஏரியின் அடிப் பகுதியில் எவ்வளவு உள்ளது எனப்தைக் கண்டறிவதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.
இதன்போது, ஆச்சரியப்படும் விதமாக ஏரியில் 18 மில்லியன் தொன் லித்தியம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அகழ்வுப் பணி மூலமாக இவை பிரித்தெடுக்கப்பட்டால், அதன் மூலமாக 382 மில்லியன் மின்சார வாகனங்களுக்கு மின்கலங்களை உருவாக்க முடியும்.
இதனால், மின்சார வாகனங்களுக்கான மின்கலங்களை உருவாக்கும் நாடுகளில் அமெரிக்கா முன்னணியாக மாறும்.