விண்வெளி மையத்திலிருந்து கொண்டே தேர்தலில் வாக்களிக்க உள்ள சுனிதா வில்லியம்ஸ்!
எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து கொண்டு வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 5ம் திகதி இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் சகவீரரான புட்ச் வில்மோருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார்.
அவர்கள் சென்ற விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் 2 பேரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டதால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் அவர்கள் பூமிக்கு திரும்புவர்கள் என நாசா தெரிவித்துள்ளது.
அதுவரை சுனிதா வில்லியமஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருப்பார். இதனால் அவரால் நவம்பர் 5ம் திகதி நடக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நேரில் வாக்களிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதனால் அவர் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து கொண்டு அதிபர் தேர்தலில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருந்தவாறு வாக்களிக்கும் முறை 1997-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
இதனால் சுனிதா வில்லியம்ஸூம் இந்த நடைமுறையை பின்பற்றி வாக்களிக்க உள்ளார்.
முதலில் அவர் பெடரல் போஸ்ட் கார்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுப்பார். அதன் பிறகு விண்வெளி கணிணிமூலம் மின்னணு வாக்களிக்க உள்ளார்.