முச்சந்தி

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஜெனிவா தொடர் கூட்டம்; தமிழ் மக்களின் ஏக்கம், அரசுக்கு கலக்கம் ?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான தொடர் கூட்டம் தற்போது ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் குறித்த ஆய்வும் கலந்துரையாடல்களும் இடம்பெற்று வருவதோடு இலங்கை தொடர்பான ஒரு பிரகடனம்மும் நிறைவேற்றப்பட உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இடம்பெற்றுள்ள அரசு அதிபர் மாற்றம் இந்த பிரகடனம் மீது எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புகளும் தற்போது அனைத்து தரப்பாலும் கூர்ந்து அவதானிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பின்னணியில் குறிப்பிடத்தக்க அறிக்கையாக இலங்கையில் இடம் பெற்று வரும் மனித உரிமைகள் மீறல்கள் சம்பந்தப்பட்ட பூரண அறிக்கையின் முதல் எழுத்து வடிவ அறிக்கையொன்று (முற்கூட்டிய அறிக்கை – Advance Report) கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
இதன் முக்கிய நோக்கம் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும். உறுப்பு நாடுகளின் அங்கத்தவர்களின் கவனத்தை பெற்று தொடர் கூட்டத்தில் இலங்கை மனித உரிமைகள் மீதான ஒரு கருத்துருவாக்கத்தை உருவாக்குவதே. இதனடிப்படையில் இலங்கையில் இடம்பெற்ற வரும் மனித உரிமைகள் பற்றிய விபர கோர்வை ஒன்று இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
OHCHR இன் பரிந்துரைகள்:
இந்த முற்கூட்டிய அறிக்கை (Advance Report) முழுவதுமாக முன்னைய உறுதிமொழிகள் இலங்கையினால் அமுல்படுத்தப்படாமையை ஆவணப்படுத்தி இருப்பதோடு மனித உரிமை மீறல்களுக்கு உறுதியான தண்டனையின்மை மீது நடவடிக்கை எடுக்க இலங்கை வெளிப்படையாக வேண்டுமென்றே மறுப்பதையும் வெளிப்படுத்துகிறது.
அறிக்கையில் பின்வரும் காரணங்கள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
• பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களை குறிப்பாக அங்கீகரிக்கத் தவறியமை.
• மனித உரிமை மீறல்களில் இராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படைகளின் பங்கை ஒப்புக்கொள்வது.
• அத்துடன் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள், சட்டத்தின் ஆட்சிக்கும், ஜனநாயகத்திற்கும், நல்லாட்சிக்கும் முக்கிய தடையாக உள்ளதை வெளிப்படுத்த வேண்டும்.
• பாரதூரமான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் நம்பத்தகுந்த வகையில் சம்பந்தப்பட்ட அரச இயந்திரத்தின் பல கட்டமைப்புகள், மற்றும் பல அரச உறுப்பினர்களும், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை மீறல்களை நிலைநிறுத்துவதில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையில் நடைமுறையில் உள்ளனர்.
• 51வது மனித உரிமைகள் பேரவை அமர்வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, 2022 இல் பொருளாதார நெருக்கடிக்கு பங்களித்த மற்றும் மக்கள் போராட்டங்களைத் தூண்டியதுடன், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் வேரூன்றிய தண்டனையின்மை வெளிப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட அனைத்தையும் மீறி, மொத்த மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறுவதற்கான இரண்டு பரிந்துரைகளின் பரிந்துரைகளை அறிக்கை தொடர்ந்து முன்வைத்துள்ளது. அதாவது ஒன்று இலங்கைக்கும் மற்றொன்று சர்வதேச சமூகத்திற்கும் ஆகும்.
• பெரும்பான்மையான துஷ்பிரயோகங்களைச் செய்த அரசு – சர்வதேச சமூகத்திற்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளையும் அவற்றின் முன்னேற்றத்தையும், நீதி வழங்க வேண்டும் என்ற இயல்புநிலை அனுமானத்தை இலங்கை தவறாக பயன்படுத்தியுள்ளது.
• பல ஆண்டுகளாக வழங்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும்.
கடந்த ஜூன் 2024 இல் மேலதிக ஆலோசனைகளுக்காக OHCHR குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்தது, மேலும் 2023 பெப்ரவரியில் இலங்கை மீதான தனது நான்காவது சுழற்சியான உலகளாவிய கால மீளாய்வை (UPR) உட்படுத்தியது.
கடந்த 15 வருடங்கள் மேலாக OHCHR/HRC இலங்கை மனித உரிமைகள் ஈடுபாட்டில் உறுதியாக இருந்து வருகிறது. ஆயினும் மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானங்களின் ஆணைகள் அல்லது இலங்கையால் நடைமுறைப் படுத்தப்பட்ட எந்த ஒரு பகுதிக்கும் இது சம்பந்தமாக எந்த பயனும் இல்லை என்பது அறிந்ததே.
இந்த எழுத்துமூல அறிக்கையை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் தலைவர் மதிப்புக்கு உரிய Hon Volker Turk அவர்கள் தனது உரையை தொடர் கூட்டத்தின் முதல் நாள் செப்டெம்பர் ஒன் பதாம் திகதி அன்று சபையில் நிகழ்த்தினார். இதில் அவர் இலங்கை தனது பழைய மனித உரிமை மீறல் பின்னணியில் இருந்து மீண்டு புதிய பாதையொன்றில் பயணம் செய்ய முயல வேண்டும் என்று வலியுறுத்தி கூறினார்.
மனித உரிமைகள் சபையின் உயர்ஸ்தானிகரின் இந்த வேண்டுகோளை அடுத்து மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள்லின் பரிசீலனைக்கு ஒரு பரிசாத்த பிரகடனம் ஒன்று செப்டெம்பர் பதினாறாம் திகதி அன்று வெளியிடப்பட்டுள்ளது.
• சர்வதேச அமைப்புகள் மற்றும் பரஸ்பர சட்ட உதவி செயன்முறைகள் மற்றும் ஒத்துழைப்பின் ஊடாக, இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றவாளிகளை விசாரிப்பதற்கும், விசாரணை செய்வதற்கும் ஒத்துழைக்கவும். உயிர் பிழைத்தவர்கள், குடும்பங்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளுடன் தொடர்பு கொள்ளுதல்.
• இலங்கையில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கு ஏனைய சர்வதேச சட்ட விருப்பங்களைப் பயன்படுத்துவதைக் முதன்மையாக கவனித்தல்.
• பரந்த அளவிலான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவும், சர்வதேச சட்டத்திற்கு இணங்கவும், மொத்த சர்வதேச மனித உரிமை மீறல்கள் அல்லது கடுமையான மனிதாபிமான சட்ட மீறல்களைச் செய்ததாக நம்பத்தகுந்ததாகக் கூறப்படும் தனிநபர்களுக்கு எதிரான சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் போன்ற மேலும் இலக்கு விதிக்கப்பட்ட தடைகளை ஆராய்தல்.
• இலங்கைப் பிரஜைகள் தொடர்பான புகலிட நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யவும், பழிவாங்கல்களை எதிர்கொள்பவர்களைப் பாதுகாப்பதற்காகவும், சித்திரவதை அல்லது பிற கடுமையான மனித உரிமை மீறல்களின் உண்மையான ஆபத்தை முன்வைக்கும் வழக்குகளில் எந்தவிதமான மறுபரிசீலனையிலிருந்தும் தவிர்த்தல்.
• OHCHR ஐ தொடர்ந்து கண்காணிப்பதற்கும் அறிக்கையிடுவதற்கும் மற்றும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் தொடர்புடைய குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் குறித்த அதன் பலப்படுத்தப்பட்ட பணிகளுக்கு ஆதரவளித்தல்.
• மேலே குறிப்பிடப்பட்டுள்ள ‘மற்ற சர்வதேச சட்ட விருப்பங்களை’ ஒன்றாகப் பயன்படுத்த HRC உறுப்பு நாடுகளையும் மற்றவர்களையும் வலுவாக ஊக்குவித்தல்.
OHCHR அறிக்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றத்தின் முக்கியத்துவத்தை குறிப்பிடுகிறது. மொத்த மனித உரிமை மீறல்களுக்கான சர்வதேச நீதி மன்றங்களுக்கான வழிகள் கிடைக்கவில்லை என்றால், கடந்த காலத்தில் சிறப்பு குற்றவியல் நீதிமன்றங்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டன.
• HRC உறுப்பு நாடு மற்றும் பிறரை OHCHR இன் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்துடன் (OSLAP) இணைந்து செயல்படுமாறு பேரவை வேண்டுகிறது.
• மேலும் OSLAP கடந்த சில வருடங்களாக ஆர்வத்துடன் சேகரித்து வரும் சான்றுகள் மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி உண்மையான சட்ட வழக்குகள் மற்றும் பிற பொறுப்புக்கூறல்களை விரைவாகத் தொடர்வது
• தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு செய்த போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் உட்பட அந்தச் சட்டங்களின் மொத்த மீறல்களுக்கு தண்டனையின்மை, சட்டத்தை புறக்கணிக்க மற்றவர்களை ஊக்குவிக்கிறது மற்றும் அதன் பொருத்தமற்ற தன்மைக்கு வழிவகுக்கிறது.
• சர்வதேச விதி அடிப்படையிலான ஒழுங்கை பராமரிக்க உடனடி நடவடிக்கையை இப்பேரவை அவசரமாக பரிந்துரைக்கிறது.
இந்த பரீட்சார்த்த பிரகடனம் உறுப்பு நாடுகளின் பரிசீலனைக்கு தற்போது உட்படுத்தப்பட்டு இதனுடைய இறுதி வடிவம் எதிர்வரும் ஒக்டோபர் மாத முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடும் வாய்ப்புகள் உள்ளதாகவே ஜெனிவாவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பொறுத்திருந்து பார்ப்போம் !
இதேவேளை இந்த பிரகடனத்துக்கு மேலும் வலுச்சேர்க்கும் வண்ணம் புலம்பெயர்ந்த நாடுகளின் ஒன்பது தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை உறுப்பு நாடுகளுக்கு சமர்ப்பித்து உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதேவேளை புலம் பெயர்ந்த அமைப்புக்களும் மற்றும் தாயகத்தில் செய்யப்படும் மனித உரிமை அமைப்புகள், மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க பிரதிநிதிகளும் தொடர்ச்சியாக சந்திப்புகள் மற்றும் தாயகசூழ்நிலை, மனித உரிமை மீறல்கள் பற்றிய விளக்க கூட்டங்கள் என ஜெனிவாவில் தற்போது களம் அமைத்து செய்யப்பட்டு வருகிறார்கள்.
இவ்வாறு. இடையறாது செய்யப்படும் தொடர் கோரிக்கைகளும் அழுத்தங்களும் இந்த மனித உரிமை பேரவையின் பிரகடனத்தில் இடம்பெற்று தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையுமா? அல்லது வெறும் கனவாகவே இந்த பிரகடனம்வும் கடந்து விடுமா ? அதையும் பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.
பின்வரும் புலம்பெயர் ஒன்பது தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து இக்கூட்டறிக்கையில் கோரியுள்ளன.
1. அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ். (ATC – AustralianTamil Congress)
2. வட கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான சங்கம். (ARED-Association for Relatives of the Enforced Disappearances, North & East Provinces, Sri Lanka)
3. வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு. (FeTNA – Federation of Tamil Sangams of North America)
4. இலங்கைத் தமிழ்ச் சங்கம், அமெரிக்கா. ( Ilankai Tamil Sangam)
5.பிரான்ஸ் தமிழீழ அவை (Maison du Tamil Eelam, France)
6. இலங்கையில் சமத்துவம் மற்றும் நீதிக்கான மக்கள். (Pearl Action – People for Equality And Relief in Lanka)
7. ஐக்கிய தமிழ் அமெரிக்கர்கள். (PAC – Tamil Americans United)
8. ஐக்கிய அமெரிக்க தமிழ் செயல் குழு (USTAG – United States Tamil Action Group)
9. உலகத் தமிழர் அமைப்பு, அமெரிக்கா. (WTO – World Thamil Organization, USA)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.