பலதும் பத்தும்

வெள்ளி கோளை ஆராயும் நோக்கில் விஞ்ஞானிகள்: தயார் செய்யப்படும் விண்கலம்

சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள கோள் வீனஸ் எனப்படும் வெள்ளி.

இந்த வீனஸ் கோள் பற்றி ஆய்வு செய்வதற்கு இந்திய ஆராய்ச்சி நிறுவனம் முடிவு செய்து சுக்ரயான் – 1 என்ற விண்கலத்தை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதுதொடர்பில் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, “இந்த வீனஸ் திட்டம் எதிர்வரும் 2028ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதியன்று விண்ணில் ஏவப்படும். இதற்காக அதிக எடையை தாங்கிச் செல்லக்கூடிய எல்.வி.எம் – 3 ரகத்திலான ரொக்கெட்டை பயன்படுத்த உள்ளது.

ஏவப்பட்டு நான்கு மாதங்களின் பின்னர் சுமார் 112 நாட்கள் பயணம் செய்த பின்னர் அதே வருடத்தில் ஜூலை 19ஆம் திகதியன்று வெள்ளிக் கோளை சுக்ரயான் விண்கலம் சென்றடையும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.